கடந்த ஆண்டில் கொரோனாவினால் உலகமே முடங்கி போயிருந்த நிலையில் கூட, பல பில்லியனர்கள் மேலும் பல லட்சம் கோடிகளை சம்பாதித்துள்ளனர். இதனை வெளிப்படுத்தும் விதமாகவே ஹூருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2021ன் பட்டியல் வந்துள்ளது.
இதில் 34 வயதான இரு இந்திய இளம் பில்லியனர்களும் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அபூர்வா மேத்தா, இன்ஸ்டாகார்ட் நிறுவனர், ஜெரோதா நிறுவனத்தின் நிகில் காமத் ஆகியோர் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களின் தான் இந்தியாவில் இளம் பில்லியனர்கள் என்றும், இவர்களின் சொத்து மதிப்பு 1.7 பில்லியன் டாலர்கள் என்றும் இந்த லிஸ்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய பணக்காரர்கள்
தற்போது இந்தியாவில் மொத்தம் 209 பெரும் பணக்காரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டில் இந்த லிஸ்டில் இணைந்துள்ளனர்.
இந்த லிஸ்டில் இந்திய பணக்காரர்கள் லிஸ்டில் முகேஷ் அம்பானி 83 பில்லியன் டாலருடன் (ரூ.6,05,900 கோடி) முதலிடத்திலும், இதே கவுதம் அதானி 32 பில்லியன் டாலர் (ரூ.2,34,100 கோடி) மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், இதே ஷிவ் நாடார் 27 பில்லியன் டாலர் (ரூ.1,94,100 கோடி) மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
டாப் பில்லியனர்கள்
லட்சுமி என் மிட்டல் 19 பில்லியன் டாலர் (ரூ.1, 40,100 கோடி) மதிப்புடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். இதே சைரஸ் பூனவாலா 18.5 பில்லியன் டாலர் (ரூ.1,35,300 கோடி) மதிப்புடன் ஐந்தாவது இடத்திலும், இதே ஹிந்துஜா பிரதர்ஸ் 18 பில்லியன் டாலர் மதிப்புடன் (ரூ1,31,000 கோடி), உதய் கோடக் 15 பில்லியன் டாலர் மதிப்புடன் ( ரூ.1,08,600 கோடி), ராதாகிஷன் தமனி மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்து மதிப்பு 14.5 பில்லியன் டாலர் (ரூ.1,06,500 கோடி)யாகவும் அதிகரித்துள்ளது.
இதே ஜே சவுத்ரி(zscaler) 13 பில்லியன் டாலருடன் (ரூ.96,000 கோடி) ஒன்பதாவது இடத்திலும், தீலிப் சங்வி மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்து மதிப்பு 12.5 பில்லியன் டாலர் மதிப்புடன் (ரூ.91,800 கோடி)யாகவும் உள்ளது.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு
எப்படி இருப்பினும் வழக்கம்போல இந்த லிஸ்டில் வழக்கம்போல 83 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய பணக்காரராக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இவர் கடந்தாண்டில் 24% வளர்ச்சியினை கண்டுள்ளார். உலகளவில் எட்டாவது இடத்தினை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.
கவுதம் அதானியின் சொத்து மதிப்பு
இதே மற்றொரு தொழிலதிபரான குஜராத்தினை சேர்ந்த தொழிலதிபரான கவுதம் அதானியின் சொத்து மதிப்பானது 2020ம் ஆண்டில் 32 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இவரது சொத்து மதிப்பு கிட்டதட்ட இருமடங்கு அதிகமாகும். சர்வதேச அளவில் 20 இடங்கள் முன்னேறி 48 பணக்காரராகவும், இதே இந்தியாவில் இரண்டாவது பணக்கார இந்தியராகவும் முன்னேறியுள்ளார்.


Click it and Unblock the Notifications