இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி என்பது 2.7 சதவீதமாக சரிவடைந்து இருக்கிறது. சுரங்கத் துறை உற்பத்தி மந்தமடைந்ததே இதற்கு முக்கிய காரணம் என தெரிய வந்திருக்கிறது.
மத்திய புள்ளியல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி என்பது 3.94 சதவீதமாக இருந்தது அது ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாக குறைந்துள்ளது. தொழில் துறை உற்பத்தி குறியீடு ஏப்ரல் மாதம் மந்தநிலையை அடைந்திருப்பதற்கு சுரங்க துறையில் உற்பத்தி சரிந்ததே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சுரங்கத் துறையில் உற்பத்தி என்பது -0.2 சதவீதம் என இருக்கிறது. அதேவேளையில் மின்சார துறையில் உற்பத்தி என்பது 1.1 சதவீதம் என குறைந்து இருக்கிறது. மற்ற உற்பத்தி துறையை பார்க்கும் போது 3.4 சதவீதம் என உற்பத்தி சற்றே உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி என்பது 5.2 சதவீதமாக இருந்தது.
மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி பார்க்கும்போது உள்கட்டமைப்புக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி என்பது 4 சதவீதமாகவும் நீடித்த நுகர்வு பொருட்களுக்கான உற்பத்தி என்பது 6.4 சதவீதமாகவும் குறைந்து இருக்கிறது. அதே வேளையில் நீடிக்கும் தன்மை இல்லாத நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி தொடர்ந்து ஐந்தாவது மாதமாக -1.7 சதவீதம் என்ற நிலையிலேயே இருக்கிறது.
முதன்மை பொருட்களின் உற்பத்தி பிரிவு -0.4 சதவீதம் என ஏப்ரல் மாதத்தில் சரிவில் தான் இருந்திருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும் இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் மூலதன பொருட்கள் உற்பத்தி துறை மட்டும் 20. 3 சதவீத வளர்ச்சி என இரண்டு இலக்க வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மத்திய புள்ளியல் துறை அமைச்சகம் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் ஒருமுறை நாட்டின் தொழில்துறை உற்பத்தி தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருகிறது.
இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி சரிவடைந்திருப்பது தொடர்பாக ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸிற்கு பேட்டி அளித்திருக்கும் அக்யூட் ரேட்டிங்ஸ் லிமிடெட் & ரிசர்ச் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சங்கர் சக்கரவர்த்தி "நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், மோட்டார் வாகனங்கள் ,அடிப்படை உலோகங்கள் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரித்திருப்பதே உற்பத்தி துறை 3.4 சதவீத வளர்ச்சியில் இருப்பதற்கு காரணம்" என குறிப்பிடுகிறார்.இந்தியாவில் பருவமழை எப்படி செல்கிறதோ அதை பொறுத்து தான் இந்த ஆண்டுக்கான தொழில்துறை உற்பத்தி என்பது இருக்கும் என்றும் அவர் கணித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications