ரேகா ஜூன்ஜூன்வாலா, ராகேஷ் ஜூன்ஜூன்வாலா-வின் பெரும் முதலீட்டு ஆதரவுடன் இயங்கி வரும் ஆப்டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ ஆன டாக்டர். அனில் பந்த் ஆகஸ்ட் 15 அன்று காலமானார்.
54 வயதான அனில் பந்த் உடல்நலக் பாதிப்புகளை காரணம் காட்டி காலவரையற்ற விடுப்பு எடுத்திருந்த சில மாதங்களிலேயே பந்த் காலமானார் என்ற செய்தி வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி, உடல்நிலை மோசமடைந்ததால், பந்த் காலவரையற்ற விடுப்பு எடுத்ததாக பங்குச்சந்தையில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது ஆப்டெக்.

சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் பர்னிச்சர் நிறுவனமான பெப்பர்ஃப்ரை-ன் இணை நிறுவனர் அம்பரீஷ் மூர்த்தி லே பகுதியில் மாரடைப்பால் இறந்தார். இவருக்கு வயது 51 மட்டுமே. இளம் தலைமுறையினர் மட்டும் அல்லாமல் தற்போது நடுத்தர வயதில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் மற்றும் தலைவர்களும் மரணத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஆப்டெக் நிறுவனத்தின் அவசரக் கூட்டம் ஜூன் 19 அன்று நடைபெற்றது, நிறுவனம் அதன் செயல்பாடுகள் சீராக நடைபெறுவதையும், தொடர்ந்து செயல்படுவதையும் உறுதி செய்வதற்காக நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகத்தை உள்ளடக்கிய இடைக்கால நிர்வாக குழுவை அமைத்தது.
இதன் பின்பு தான் அனில் பந்த் காலவரையற்ற விடுப்புக்கு சென்றார். ஆப்டெக்கின் நியமனம் மற்றும் ஊதியக் குழு மற்றும் இயக்குநர்கள் குழு இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியைத் தேர்ந்தெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் தான் ஆப்டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ ஆன டாக்டர். அனில் பந்த் ஆகஸ்ட் 15 அன்று காலமானார். இவருடைய மரணத்தை தொடர்ந்து ஆப்டெக் பங்குச்சந்தையில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது, நிறுவனத்தின் அனைத்து இயக்குநர்கள் மற்றும் பணியாளர்கள் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அனில் பந்த் ஆப்டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ 2016 ஆம் ஆண்டில் இருந்து தொடர்கிறார். ஆப்டெக் நிறுவனத்திற்கு வரும் முன்பு அனில் பந்த் டிசிஎஸ், sify டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். ஐடி துறையில் மட்டுமே அனில் பந்த்-க்கு சுமார் 25 வருடம் அனுபவம் உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications