இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக இருக்கும் மஹிந்திரா குழுமம் அடுத்தடுத்து எலக்ட்ரிக் கார்களை தயாரித்து இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதற்கான ஏற்கனவே பல கூட்டணிகளை உருவாக்கியுள்ள மஹிந்திரா குழுமம் அதன் கார்களில் பல்வேறு சேவைகளுக்காக இசையை உருவாக்க இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் பல முன்னணி பிராண்டுகளுக்காகு இசையமைத்துள்ளார் தனது இளம் பருவத்திலேயே நரசுஸ் காஃபி முதல் ஏர்டெல் வரையில் பிராண்டுகளின் விளம்பரத்திற்கு இசை அமைத்துள்ளார். இதில் குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் தீம் சாங் இந்தியா முழுவதும் பிரபலமானது மட்டும் அல்லாமல், ஏர்டெல்-ன் விளம்பரம் உலகம் முழுவது பிரபலமானது.

இந்த நிலையில் ஏ ஆர் ரஹ்மான், மஹிந்திரா குழுமம் அடுத்தடுத்து அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ள எலக்ட்ரிக் கார்களுக்கான இசை, அதாவது காரை அன்லாக் செய்வது முதல் MODE மாற்றுவது வரையில் பல்வேறு சேவை, செயல்பாடுகளுக்கான இசையை உருவாக்க உள்ளார். சென்னையில் இருக்கும் ஆராய்ச்சி மையத்தில் உருவான மஹிந்திராவின் காருக்கு சென்னையிலேயே ஏ ஆர் ராகுமான் அக்காருக்கான இசையை உருவாக்குகிறார்.
மஹிந்திரா - ஏ ஆர் ரஹ்மான் கூட்டணியில் மஹிந்திராவின் Born Electric EV-களுக்கு தேவையான தனித்துவமான 75 சப்தங்களை தயாரிக்க உள்ளது. இந்த சப்தங்கள் அனைத்தும் புதிதாக அறிமுகம் செய்ய உள்ள எலக்ட்ரிக் கார்களில் இணைக்கப்பட உள்ளது. இது மட்டும் அல்லாமல் மஹிந்திரா கார்களில் sound experience-ஐ மேம்படுத்தவும் உள்ளார்.

இதுக்குறித்து ஏ ஆர் ரஹ்மான் பேசுகையில், நான் ஒரு நாளும் எலக்ட்ரிக் கார்களுக்கு இசை அமைப்பேன் என நினைத்தது கூட இல்லை. நானும் என்னுடைய அணியும் ட்ரைவ் மோட், டேஷ்போர்டு, எக்ஸ்பீரியன்ஸ் மோட் ஆகியவற்றுக்கு சிறப்பு இசையை உருவாக்க உள்ளோம். இந்த முக்கிய திட்டத்திற்காக என்னை மஹிந்திரா அணுகிய போது, கார் டிசைன்-ஐ பார்த்த உடனே, சரி என சொல்லிவிட்டேன் என தெரிவித்தார்.
சுதந்திர தினத்தில் மஹிந்திரா குழுமம் OJA டிராக்டர்களை அறிமுகம் செய்தது, இந்த அறிமுக விழாவில் கலந்துக்கொண்ட ஏ அர் ரகுராம் மஹிந்திரா உடன் இணைந்ததை அறிவித்தார். இதேபோல் ஹாலிவுட்-ல் HANS ZIMMER என்ற பிரபல இசையமைப்பாளர் BMW எலக்ட்ரிக் கார்களுக்கு கலக்கலான இசையை அமைத்திருந்தார். இதேபோல் ஏ ஆர் ரஹ்மான் மஹிந்திரா உடன் இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications