இந்திய திரையுலகின் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் சமீப காலமாக பல படங்களில் பணியாற்றியது மட்டும் அல்லாமல் சொந்தமாகவும் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் புதிய பாடலை பாடி வெளியிட்டுள்ளார், இந்த பாடலில் மிருணால் தாகூர் நடித்துள்ளார். கூடவே மலையாள சூப்பர் ஸ்டார் ஒருவரும் இணைந்துள்ளார்.
அப்பா ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க மகன் ஏ.ஆர். அமீன் பாட என மிகப்பெரிய தயாரிப்பு செலவில் பீகி பீகி என்ற மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர். அமீன் இந்த பாடலை ஜாஸ்லீன் ராயலுடன் இணைந்து பாடியுள்ளார்.

பல பட வேலைகளுக்கு நடுவில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். இந்த பாடல் சினிமா அளவிலான பிரமாண்டத்துடன் மிகப்பெரிய பொருட் செலவில் அழகாக எடுக்கப்பட்டு உள்ளது. இது இன்றைய இளம் தலைமுறையினரை கவரும் வகையில் இசை, பாடல் ஒளிப்பதிவு என அனைத்தும் ஒருங்கிணைத்து தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த பாடலில் மலையாள சூப்பர் ஸ்டாரான துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாகூர் நடித்துள்ளனர். ஒருப்பக்கம் ஏ.ஆர்.ரஹ்மான் மறுபுறம் மிருணால் தாகூர் - துல்கர் சல்மான் சீதா ராமம் ஜோடி என மாஸ்ஸாக மாறியுள்ள இந்த மியூசிக் வீடியோ மக்கள் மத்தியில் எளிதாக சென்றடைந்துள்ளது. இதன் மூலம் ஒரு நாளில் இந்த மியூசிக் வீடியோ யூடியூப்-ல் மட்டும் சுமார் 23 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

ஏ.ஆர். அமீன் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது முன்னாள் மனைவியான சாயரா பானுவின் மகன். 2003 ஜனவரி 6ஆம் தேதி பிறந்த அவர் இளம் வயதிலேயே இசைத்துறையில் தனி இடத்தை பிடித்துள்ளார். தந்தையின் இசையமைப்பில் 2015இல் வெளியான ஓ காதல் கண்மணி படத்தில் பாடியதன் மூலம் அறிமுகமானார். 11ஆம் வகுப்பு படிக்கும் போதே தனது முதல் தனிப்பாடலான சாகோவை வெளியிட்டார்.

ஏ.ஆர். அமீனின் அதிகாரப்பூர்வ நிகர மதிப்பு வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அவரது தந்தை ஏ.ஆர். ரஹ்மானின் சொத்து மதிப்பு ரூ.414 கோடி முதல் ரூ.1,700 கோடி வரை மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர். அமீன் தனது இசைப் பயணத்திலும் ஆன்மீக வாழ்க்கையிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் அவரது காதல் வாழ்க்கை குறித்த பல வதந்திகள் பரவியது. ஆனால் அமீன் இதை பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications