கோவை: பெட்ரோலில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனங்களை 2 மணி நேரங்களிலேயே மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனமாக மாற்றி சாதித்து வருகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண்.
சிவசங்கரி என்பவர் ஏஆர்4 டெக் (AR4 Tech ) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பெட்ரோலில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனங்களை இரண்டு மணி நேரங்களிலேயே மின்சார வாகனங்களாக மாற்றி தருகிறது. ஒருமுறை தன்னுடைய தந்தை பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என புலம்பினாராம் , அப்போது மின்சார வாகனத்திற்கு மாறலாமே என இவர் யோசனை தெரிவித்த போது, மின்சார வாகனங்களின் விலை அதிகம் இதனை விற்றுவிட்டு அதனை வாங்குவது பொருளாதார ரீதியாக பொருந்தி வராது என கூறினாராம். இதுவே ஏஆர்4 டெக் நிறுவனம் உருவாக காரணமாக அமைந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் தக்கோலம் கிராமத்தில் பிறந்தவர் தான் சிவசங்கரி. குடும்பத்தில் இவரும் இவருடைய சகோதரி தான் முதல் பெண் பட்டதாரிகளாம். படிப்பை முடித்த இவர் பின்னாளில் கல்லூரியில் பேராசிரியராக பணிக்கு சேர்ந்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டில் கோயம்புத்தூருக்கு குடி பெயர்ந்த இவர் இஎம்எஸ் இன்னோவேஷன் என்ற நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். அது மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான மோட்டர்களை தயாரித்து வழங்கக்கூடிய ஒரு நிறுவனம்.,
மின்சார இருசக்கர வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து இவர் கற்றுக் கொண்டார். பின்னர் தன்னுடன் பணிபுரிந்த ஊழியரோடு சேர்ந்து பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களை மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களாக மாற்றுவது குறித்து ஆய்வு நடத்த தொடங்கினார். அப்படி இருவரும் இணைந்து ஒரு மோட்டாரை உருவாக்கி இருக்கிறார்கள். இது தான் அவர்களின் தொழிலுக்கு அடிப்படையாக அமைந்தது.
பெட்ரோல் இருசக்கர வாகனங்களில் இருக்கும் என்ஜின்களை மின்சாரத்தில் இயங்கும் வகையிலான என்ஜின்களாக மாற்றுகிறது இவர்களின் நிறுவனம். இரண்டு மணி நேரங்களிலேயே இதனை செய்து விட முடியும் என கூறும் இவர் இதற்காக 39 ,900 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கிறார். ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜெஸ்ட் உள்ளிட்ட மக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய இருசக்கர வாகனங்களில் இந்த மோட்டாரை பயன்படுத்தி அவற்றை மின்சாரத்தில் இயக்கும் வாகனங்களாக இவர் மாற்றி இருக்கிறார்.
இவருடைய நிறுவனம் no-weld, no-grind, no-cut, and no-drill என்ற அணுகுமுறையில் என்ஜினை மாற்றுகிறது. அதாவது யார் வேண்டுமானாலும் இவர்களிடம் இருக்கும் கிட் வாங்கிக் கொண்டால் போதும் , பழைய என்ஜினை நீக்கிவிட்டு இதனை பொருத்தி பேட்டரியை மாட்டி மின்சார வாகனமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறுகிறார். தற்போது இவர்கள் மாற்றி தரக்கூடிய மின்சார வாகனங்களில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன என கூறுகிறார். இந்த வாகனங்களுக்கு, மூன்று ஆண்டுகள் வாரன்டி தருவதாக தெரிவிக்கிறார். தங்களுடைய கவனம் முழுவதும் மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை நகரங்களில் தான் இருக்கிறது என கூறுகிறார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications