வாழ்க்கை ஒரு வட்டம்டா.. ஒரே நாளில் 28,54,000 சதவீத வளர்ச்சி ARCX கிரிப்டோ..!

கிரிப்டோ சந்தையில் ஓவர் நைட்டில் பல ஆயிரம் சதவீதம் வளர்ச்சி அடையும் கிரிப்டோகரன்சிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால்,இதுப்போன்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதை தாண்டி தற்போது 10ல் ஒன்றாக மாறி விட்டது. கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியிலும் இதுப்போன்ற கிரிப்டோகரன்சிகளுக்கு பெரிய அளவில் ஈடுப்பாடு காட்டுவது இல்லை என்றால் மிகையில்லை.

இந்த சூழ்நிலையில் இன்று ஆர்க் கவர்னென்ஸ் என்ற ஒரு கிரிப்டோகரன்சியின் தாறுமாறான வளர்ச்சி தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. ஒரே நாளில் 28,54,000 சதவீத வளர்ச்சி என்றால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

 கிரிப்டோகரன்சி சந்தை

கிரிப்டோகரன்சி சந்தை

கிரிப்டோகரன்சி சந்தையில் தற்போது Altcoins மீது தான் அதிகப்படியான முதலீடுகள் குவிந்து வருகிறது. இதனால் பிட்காயின் மற்றும் இதர முன்னணி கிரிப்டோகரன்சிகள் மதிப்பு பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் அதே விலையில் தான் உள்ளது. இன்னும் சில கிரிப்டோகரன்சிகள் விலையும் சரிந்து வருகிறது.

 ஆர்க் கவர்னென்ஸ்

ஆர்க் கவர்னென்ஸ்

கிரிப்டோ உலகில் தாறுமாறான வளர்ச்சி அடைந்த ஷிபா இனு,கோகோ ஸ்வேப்,எதிரியம் மேட்டா ஆகியவற்றின் வரிசையில் தற்போது ஆர்க் கவர்னென்ஸ் என்ற கிரிப்டோகரன்சியும் இடம்பெற்றுள்ளது. கடந்த 24 மணிநேர வர்த்தகத்தில் ஆர்க் கவர்னென்ஸ் சுமார் 28,54,000 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

 ஓரே இரவு

ஓரே இரவு

ஆதாவது நேற்று இரவு நீங்க ஆர்க் கவர்னென்ஸ் கிரிப்டோவில் 1000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது 28.54 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்திருக்கும். ஆமாங்க 16ஆம் தேதி வெறும் 0.3572 டாலருக்கு வர்த்தகமான ARC Governance தடாலடியாக 9,991.70 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

 28,54,000 சதவீத வளர்ச்சி

28,54,000 சதவீத வளர்ச்சி

ஆனால் இதன் பின்பு நடந்தது தான் கூத்து,28,54,000 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து ஆர்க் கவர்னென்ஸ் அடுத்த சில மணிநேரத்திலேயே 90 சதவீதம் சரிந்து 812.7 டாலர் விலையில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஒரு 10 மணிநேரம் 8000 டாலரில் இருந்து 9991.70 டாலர் வரையில் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

 ஆர்க் கவர்னென்ஸ் மதிப்பீடு

ஆர்க் கவர்னென்ஸ் மதிப்பீடு

இந்த தடாலடி உயர்வில் ஆர்க் கவர்னென்ஸ் கிரிப்டோவின் மொத்த சந்தை மதிப்பு 99 பில்லியன் டாலர் வரைில் உயர்ந்துள்ளது. மேலும் ஆர்க் கவர்னென்ஸ் உண்மையில் சிறந்த கிரிப்டோ தான் என இட்ஸ்பிளாக்செயின் நிறுவனத்தின் தலைவர் ஹித்தேஷ் மால்வியா தெரிவித்துள்ளார்.

லாபம்

லாபம்

மேலும் ஆர்க் கவர்னென்ஸ் 100,000,000 டோக்கன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என இலக்கையும் வைத்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கீழ் இருந்து உச்சத்திற்கு சென்று,உச்சத்தில் இருந்து மீண்டும் கீழே வந்துள்ளது. ஆனால் நேற்றை விலையான 0.3572 டாலரில் இருந்து 812.7 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+