குஜராத்தில் ரூ.1,00,000 கோடி முதலீடு.. லட்சுமி மிட்டல் மகன் ஆதித்யா மிட்டல் அதிரடி..!

உலகின் முன்னணி ஸ்டீல் மற்றும் சுரங்க வர்த்தகக் குழுமமான ஆர்சலர்மிட்டல் குழுமத்தில் சமீபத்தில் உயர்மட்ட நிர்வாகம் மாற்றம் அடைந்தது அனைவருக்கும் தெரியும். இந்தியரான லட்சுமி மிட்டல் இந்நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து விலகி நிர்வாகத் தலைவராகவும் பதவியேற்றிய நிலையில், இந்நிறுவனத்தின் சிஇஓ-வாக ஆதித்யா மிட்டல் பொறுப்பேற்றார்.

இந்த நிர்வாக மாற்றத்தின் போதே இந்நிறுவனம் அடுத்தச் சில வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் அளவிற்குப் பல திட்டங்களை வகுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதன் படி இந்தியாவில் சுமார் 1,00,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது ஆர்சலர்மிட்டல் குழுமம்.

ஆதித்யா மிட்டலின் ஆர்சலர்மிட்டல்

ஆதித்யா மிட்டலின் ஆர்சலர்மிட்டல்

ஆதித்யா மிட்டல் தலைமையிலான ஆர்சலர்மிட்டல் குழுமம் சூரத் பகுதியில் இருக்கும் தனது ஸ்டீல் மற்றும் இதர சில முக்கியமான திட்டத்தில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய முடிவு செய்துள்ளது எனக் குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டீல் தேவை அதிகரிப்பு

ஸ்டீல் தேவை அதிகரிப்பு

கொரோனா தொற்று முழுமையாகக் குறைந்த பின்பு இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் கட்டுமான பணிகளையும், உற்பத்தி திட்டங்களையும் மிகப்பெரிய அளவில் கையில் எடுக்க அரசும் தனியார் நிறுவனங்களும் முடிவு செய்துள்ளது. இதற்காக உலகமும் முழுவதும் ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்களும் தனது உற்பத்தியை வேக வேகமாக அதிகரித்து வருகிறது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி

இத்திட்டத்தின் படி ஆர்சலர்மிட்டல் குழுமம் குஜராத் மாநிலத்தின் ஹசிரா பகுதியில் இருக்கும் ஆர்சலர்மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனத்தில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக ஆர்சலர்மிட்டல் நிப்பான் ஸ்டீல் நிறுவனத்தின் சிஇஓ திலீப் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி-ஐ சந்தித்துள்ளார்.

எஸ்ஸார் ஸ்டீல் தொழிற்சாலை

எஸ்ஸார் ஸ்டீல் தொழிற்சாலை

2019ஆம் ஆண்டு எஸ்ஸார் நிறுவன கட்டுப்பாட்டில் இருந்த ஸ்டீல் உற்பத்தி தொழிற்சாலை திவாலான நிலையில், இதை ஆர்சலர்மிட்டல் நிப்பான் ஸ்டீல் நிர்வாகம் கைப்பற்றித் தற்போது இயக்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் ஸ்டீல் உற்பத்தியை மேம்படுத்தவே தற்போது ஆர்சலர்மிட்டல் குழுமம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

குஜராத் மாநில அரசு

குஜராத் மாநில அரசு

குஜராத் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி குஜராத் மாநிலத்தின் ஹசிரா பகுதியில் இருக்கும் ஆர்சலர்மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா தொழிற்சாலையில் 50,000 கோடி ரூபாயும், குஜராத் பகுதியிலேயே சோலார் மின்சாரம், காற்றாலை மின்சாரம், ஹைட்ரஜென் கேஸ் உற்பத்தி தளம் ஆகியவற்றை அமைக்க 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

1,00,000 கோடி ரூபாய் முதலீடு

1,00,000 கோடி ரூபாய் முதலீடு

இப்புதிய முதலீட்டை வரவேற்றுள்ள விஜய் ரூபானி ஆர்சலர்மிட்டல் குழுமத்தின் 1,00,000 கோடி ரூபாய் முதலீட்டுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்யும் என நம்பிக்கை கொடுத்துள்ளார். மேலும் இந்த முதலீடுகளும், அதற்கான பணிகளும் விரைவில் நடைபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது ஆர்சலர்மிட்டல் குழுமம்.

ஆர்சலர்மிட்டல் நிர்வாகம்

ஆர்சலர்மிட்டல் நிர்வாகம்

உலகின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாக விளங்கும் ஆர்சலர்மிட்டல் குழுமத்தில் உயர்மட்ட நிர்வாகத்தில் சில மாதங்களுக்கு முன்பு மிகவும் முக்கியமான மாற்றம் ஏற்பட்டது.

லட்சுமி மிட்டல் டூ ஆதித்யா மிட்டல்

லட்சுமி மிட்டல் டூ ஆதித்யா மிட்டல்

ஆர்சலர்மிட்டல் குழுமத்தில் 36 சதவீத பங்குகளை வைத்துக்கொண்டு, இக்குழுமத்தின் சிஇஓ மற்றும் நிர்வாகத் தலைவராக இருந்த லட்சுமி மிட்டல், சிஇஓ பதவியிலிருந்து விலக உள்ளார். இந்நிலையில் இக்குழுமத்தின் புதிய சிஇஓ-வாக 20 வருடமாக லட்சுமி மிட்டல் உடன் பணியாற்றி வரும் அவரது ஓரே மகனான 45 வயதான ஆதித்யா மிட்டல் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

முக்கிய நிர்வாக மாற்றங்கள்

முக்கிய நிர்வாக மாற்றங்கள்

2020ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று மூலம் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பிலிருந்து கடுமையாக உழைத்து உலக நாடுகளில் நிறுவனங்கள் மீண்டு வரும் இந்த வேளையில், இந்த வர்த்தகத் தொய்வு காலத்தை முக்கிய நிர்வாக மாற்றங்களை எடுக்கப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இந்தியா மட்டும் அல்லாமல் உலகில் பல முன்னணி நிறுவனத்தில் முக்கியமான நிர்வாகம் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஷிவ் நாடார் டூ ரோஷினி நாடார்

ஷிவ் நாடார் டூ ரோஷினி நாடார்

சமீபத்தில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து இந்நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் விலகி தனது இடத்தை ஓரே மகளான ரோஷினி நாடார் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காலணி தயாரிப்பு நிறுவனமான பாட்டா நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகத் தலைவர் மாற்றப்பட்டார், இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

தொழில்நுட்பம் முக்கியம்

தொழில்நுட்பம் முக்கியம்

மேலும் ஆர்சலர் மிட்டல் குழுமத்தின் எதிர்காலத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் தொழில்நுட்பம் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என ஆதித்யா மிட்டல் தலைமையிலான நிர்வாகக் குழும நம்புகிறது.

இன்போசிஸ் உடன் கூட்டணி

இன்போசிஸ் உடன் கூட்டணி

இதற்காக உலகின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான

ஆர்சலர் மிட்டல் தனது ஐரோப்பிய நிறுவனத்திற்குத் தேவையான டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன், அடுத்த தலைமை நிர்வாகம், வர்த்தக மேலாண்மை சேவைகளில் டெக் சேவைகளைக் கொண்டு வரவும், மேம்பாடுகளைச் செய்யவும் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ஐ தேர்வு செய்துள்ளது.

சிறப்பான நிர்வாகம்

சிறப்பான நிர்வாகம்

இன்போசிஸ் நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தம் செய்துள்ள ஆர்சலர் மிட்டல், இந்த டெக் மேம்பாடுகள் மூலம் ஆர்சலர் மிட்டல் தனது வர்த்தகத்தை மிகவும் சிறப்பான முறையில் நிர்வாகம் செய்வது மட்டும் அல்லாமல் அதிகளவில் மேம்படுத்த முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+