மும்பையின் தாராவி மறுசீரமைப்பு மெகா திட்டத்துக்கான ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு பில்லியனர் கௌதம் அதானியின் அதானி குரூப் பெற்றது. இதற்காக ஹபீஸ் காண்ட்ராக்டர் உள்பட 3 நகர்ப்புற திட்ட நிபுணர்களை அதானி குழமம் பணியமர்த்தியுள்ளது.
ஹபீஸ் காண்ட்ராக்டரும் மற்ற இரு நிபுணர்ககளும் சேர்ந்து தாராவி மறுமேம்பாட்டு திட்டத்துக்கான ஒரு வரைவு முன்மொழிவை சமர்ப்பிப்பர். மும்பையின் தாராவி பகுதி ஆசியாவிலேயே மிகப் பெரிய சேரியாகும். இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக அதானி குரூப் ரூ.21,000 கோடியை முதலீடு செய்கிறது.

இதுபற்றி அதானி குரூப் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகப் புகழ்பெற்ற ஆர்க்கிடெக்ட் ஹபீஸ் காண்ட்ராக்டர், டிசைன் நிறுவனமான சஸாகி, கன்சல்டன்சி நிறுவனமான புரோ ஹேப்போல்டு சேர்ந்து இந்தத் திட்டத்துக்கான இன்ப்ராஸ்ட்ரக்சர்களை தயாரிப்பர் என்று கூறப்பட்டுள்ளது.
ஹபீஸ் காண்ட்ராக்டர் இந்தியாவின் சிறந்த ஆர்க்கிடெக்ட்களில் ஒருவர். இந்தியாவில் உள்ள முக்கிய கட்டடங்கள் பலவற்றை அவர் டிசைன் செய்துள்ளார். குறிப்பாக மும்பையில் பலமாடி அடுக்குக் குடியிரு்பபுகளை வடிவமைத்துள்ளார்.
போவாயில் உள்ள ஹிராநந்தனி கார்டன்ஸ், பெங்களூரில் உள்ள இன்போசிஸ் தலைமையகம், பெங்களூரு, மும்பையில் உள்ள நாட்டிலேயே மிக உயரமான கட்டடங்களான தி இம்பீரியல், தி 42 ஆகிய ஸ்கைஸ்கிரேப்பர்ஸ்கள் இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.
துபாயில் உள்ள 23 மெரினாவை ஹபீஸ்தான் வடிவமைத்தார். இது ஒரு காலத்தில் உலகின் மிக உயரமான குடியிருப்பு கட்டடமாகத் திகழ்ந்தது. பின்னர் நியூயார்க்கில் உள்ள 432 பார்க் அவென்யூ அந்தப் பெருமையை தட்டிச் சென்றது. ஸ்கைஸ்கிராப்பர்கள் தவிர மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தையும் ஹபீஸ் வடிவமைத்தார்.
இது தவிர சத்ரபதி சிவாஜி விமானநிலையம், தெலங்கான முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் ஆகியவற்றையும் டிசைன் செய்துள்ளார். அவரது ஆர்க்கிடெக்சர் திறமையின் அடிப்படையில் அதானி குழுமத்தால் ஹபீஸ் காண்ட்ராக்டர் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். குறிப்பாக நகரங்களில் உள்ள சேரிப்பகுதிகள் அவருக்கு அத்துப்படியாகும்.

சமூக வீட்டுவசதி மற்றும் மும்பையில் உள்ள குடிசை மறுவாழ்வு ஆணையத்தின் (SRA) திட்டங்களில் பணிபுரிந்த அனுபவசாலி. ஹபீஸ் காண்ட்ராக்டர் உள்ளிட்ட நகர திட்டமிடல் கன்சார்ட்டியம் இது தொடர்பாக சிங்கப்பூரை சேர்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறும் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
தாராவி மறுமேம்பாட்டு திட்டத்தின் முக்கிய இலக்குகள் என்று பார்த்தால், நிலையான வளர்ச்சி, அனைத்து குடிசை குடும்பங்கள் மற்றும் வணிகங்களின் மறுவாழ்வு, மாசுபடுத்தாத தொழிற்சாலைகளை மீண்டும் நிறுவுதல், குடிசைவாசிகளை பிரதான நீரோடை குடியிருப்பாளர்களுடன் ஒருங்கிணைத்தல் ஆகியவையாகும்.
தாராவியை மேம்படுத்துவதில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க சவால் என்னவென்றால், இது ஒரு சட்டவிரோத குடியேற்றமாகும், எனவே அரசாங்கம் தாராவியில் அடிப்படை சேவைகளை வழங்கவில்லை.சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் குழாய்கள், சாக்கடைகள், மின்சாரம் மற்றும் கழிவு சேகரிப்பு போன்ற உள்கட்டமைப்புகள் அங்கு வசிப்போர் தாங்களாகவே அமைத்தால் மட்டுமே வழங்கப்படும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications