இந்தியாவில் உள்ள பிரபல கம்பெனிகளில் கோத்ரேஜும் (Godrej) ஒன்று. 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கோத்ரேஜ் தனது தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. சந்தை மதிப்பில் கோத்ரேஜின் சுமார் 76 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்த நிலையில் Godrej சாம்ராஜ்ஜியம் உருவானது எப்படி..?
சட்டக் கல்வியை முடித்த ஆர்தேஷிர் கோத்ரேஜ் மும்பையில் ஒரு நிறுவனத்தில் 1894 இல் சேர்ந்தார். ஒரு வழக்கு தொடர்பாக கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு அவர் அனுப்பப்பட்டார். கிழக்கு ஆப்பிரிக்காவில் அவர் தங்கியிருந்த போது தான் ஒரு வழக்குரைஞராக இருக்கத் தகுதியில்லை என்பதை உணர்ந்தார். இதைத் தொடர்ந்து ஆர்தேஷிர் கோத்ரெஜ் இந்தியாவுக்குத் திரும்பி ஒரு வேதியல் (Chemist) கடையில் உதவியாளராக சேர்ந்தார்.

பின்னர் அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த பார்ஸி சமுகத்தை சேர்ந்தவரான மெர்வாஞ்சி முச்சேர்ஜி காமாவிடம் ரூ.3000 கடனாக வாங்கி சுயமாகத் தொழில் தொடங்கினார். அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படும் கத்திகளை தயாரிக்கும் தொழிலை அவர் தொடங்கினார். அவர் தயாரித்த கத்தியில் மேட் இன் இந்தியா எனப் பொறிக்க மிகுந்த எதிர்ப்பை சந்தித்தார்.
அப்போது ஒரு பிரிட்டிஷ் கம்பெனிக்காக சர்ஜிக்கல் உபகரணங்களை ஆர்தேஷிர் கோத்ரேஜ் தயாரித்துத் தந்தார். அவர் தனது உபகரணங்களில் மேட் இன் இந்தியா என்ற வாசகத்தைப் பொறிக்க நினைத்தார். இதை அந்த பிரிட்டிஷ் கம்பெனி ஏற்க மறுத்தது. ஆனால் கோத்ரெஜ் தனது முடிவில் விடாப்பிடியாக இருந்தார். இதனால் பிரிட்டிஷ் கம்பெனியின் ஆர்டர் அவரிடமிருந்து கைவிட்டுப் போனது. இதைத் தொடர்ந்து அந்தத் தொழிலுக்கு முழுக்குப் போட வேண்டியிருந்தது.
இந்நிலையில் மும்பையில் நிறைய திருட்டுகள் நடப்பதால் மக்கள் தங்கள் வீடுகள் அலுவலகங்களில் அதிக பாதுகாப்பை மேற்கொள்ளுமாறு போலீஸ் கமிஷனர் ஒரு அறிவிப்பை வெளியிட்டதை செய்தித்தாளில் படித்தார் கோத்ரேஜ். அதைப் படித்தவுடன் உடனடியாக பூட்டு தயாரிக்கும் தொழிலை மேற்கொள்ள அவர் முடிவு செய்தார். மீண்டும் கடன் வாங்கி கோத்ரேஜ் மும்பையில் ஒரு 215 சதுர அடி குடவுனில் தொழிலை ஆரம்பித்தார்.
இதைத் தொடர்ந்து கோத்ரேஜ் கம்பெனி 1897 ஆம் ஆண்டு உதயமானது. கோத்ரேஜ் தயாரித்த பூட்டுகள் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதால் அவரது தொழில் வெற்றி பெற்றது.
பின்னர் தனது இளைய சகோதரர் பிரோஷோவையும் தனது தொழிலில் சேர்த்துக் கொண்டார் கோத்ரேஜ். பூட்டுத் தொழிலில் பெரும் வெற்றியை அடைந்தார்.
1958 ஆம் ஆண்டில் கோத்ரேஜ் சகோதரர்கள் பூட்டுகள், நகைகள் பணத்தை பத்திரமாக வைக்கக்கூடிய கேபினட்களை தயாரித்தனர்.
1974இல் நாட்டின் முதல் ரெப்ரிஜிரேட்டரை கோத்ரேஜ் தயாரித்தார். ஹேர் கலர் தயாரிப்புகளையும் கோத்ரேஜ் உற்பத்தி செய்தது. 2008இல் சந்திரயான்-1க்காக லாஞ்ச் வெஹிகில் மற்றும் லூனார் ஆர்பிட்டரை தயாரித்து அளித்தார். இன்றைக்கு இந்த கம்பெனி 90 நாடுகளுக்கு அதிகமாக வியாபாரம் செய்து வருகிறது. அதன் சொத்து மதிப்பு 76 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications