கருப்பு பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2016 நவம்பர் 8ம் தேதியன்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதன்படி, புழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன.
அதேசமயம், அதற்கு பதிலாக புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானிய மக்கள் பல சிரமங்களை சந்தித்தனர் மேலும் தொழில்துறை சில இடர்பாடுகளை எதிர்கொண்டது. அதேசமயம் பண மதிப்பிழப்பு நடவடிக்யைால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் இந்திய ரிசர்வ் வங்கி இந்தாண்டு மே மாதத்தில், புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என்று அறிவித்தது. மேலும் 2023 செப்டம்பர் 30ம் தேதி வரை மக்கள் தங்கள் கையில் உள்ள 2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தது.
கடந்த செப்டம்பர் 30ம் தேதி வரை, 2000 நோட்டுகளில் 87 சதவீதம் வங்கிக்கு திரும்பி விட்டது. இன்னும் ரூ.10 1000 கோடி மதிப்பிலான 2000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக தகவல். வங்கிகள் இனி 2000 நோட்டுகளை திரும்ப பெறாது என்றாலும், நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் அவற்றை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ தனிநபர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
இந்த சூழ்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் 1000 நோட்டை அறிமுகம் செய்ய உள்ளது என்ற செய்தி சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் குழம்பி போய் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இது போன்ற ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களை இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்துள்ளது. சமூக ஊடகங்களின் ஊகங்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், 1000 ரூபாயை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை. புதிய 1000 ரூபாய் நோட்டுக்கான நோக்கங்கள் இல்லை.
போதுமான பணப்புழக்கத்தை உறுதி செய்வதற்காக போதுமான அளவு 500 ரூபாய் நோட்டுகள் உற்பத்தியை உயர்த்தி சாத்தியமான பண கிடைப்பு பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டது. இது தவிர டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை எழுச்சியானது, பணத்திற்கான தேவை குறைவதற்கும் பங்களித்துள்ளது. ஆதாரமற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications