மக்கள் மத்தியில் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறும் அறிவிப்பு பெரிய அதிர்ச்சியை கொடுத்தாலும், ரீடைல் சந்தையிலும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் எந்த வகையிலும் பாதிக்கவில்லை என ரீடைல் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மே 23 முதல் வங்கிகளில் எவ்விதமான விண்ணப்பம், அடையாள அட்டை இல்லாமல் 2000 ரூபாயை மாற்றி கொடுப்பது என எஸ்பிஐ அறிவித்துள்ளதை தொடர்ந்து பிற வங்கிகளும் இதை கடைபிடிக்க உள்ளது. ஆர்பிஐ மீண்டும் 1000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்யுமா என்ற முக்கியமான கேள்விக்கும் குழப்பத்திற்கும் ரிசர்வ் வங்கி கவர்னர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான அறிவிப்பை தொடர்ந்து இன்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் ஆர்பிஐ 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் வேளையில் மீண்டும் பழைய படி 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வருகிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இது முற்றிலும் 'ஊக' அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகள், ரிசரவ் வங்கிக்கு 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டம் இப்போது ஏதுமில்லை என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
2016ல் இந்தியாவில் வேகமாக நாணய புழக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட போது ஒரே இரவில் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி மாயமானது.

இந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. சந்தையில் போதுமான பிற ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் 2018-19 ஆம் ஆண்டிலேயே 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்திவிட்டோம்.
மேலும் மக்கள் யாரும் 2000 ரூபாய் நோட்டை மாற்ற வங்கிகளுக்கு நாளைக்கே படையெடுக்க வேண்டாம், செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் அவரகாசம் உள்ளது. 4 மாதம் அவகாசம் கொடுத்ததே மக்களுக்கு போதுமான நேரம் கொடுத்து எவ்விதமான பதற்றமான நிலைக்கு தள்ள கூடாது என்பதற்காக தான். மேலும் 2000 ரூபாய் திரும்ப பெறுவதால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு மிக மிக சிறியது என்றும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications