இந்தியாவில் பல ஆண்டு காலமாக தங்கம் முன்னணி முதலீடாக உள்ளது. மேலும் அதனை சேமித்து வைக்க பல வங்கிகள் லாக்கர் வசதியை வழங்குகின்றன. இந்த வகை லாக்கர்களில் ஆவணங்கள் முதல் தங்க நகைகள் வரை பல மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். உலக அளவில் தங்கத்தின் இரண்டாவது பெரிய நுகர்வோராக இந்தியா உள்ளது. இந்திய குடும்பங்களில் சுமார் 22,000 முதல் 25,000 டன் தங்க நகைகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் தங்க சுரங்கத்தில் இருந்து பெறப்படும் தங்கத்தில் 12 சதவீதமாகும்.
நம் நாட்டில் தங்கத்திற்கு கலாச்சார முக்கியத்துவம் வேரூன்றி இருப்பதால், மக்கள் அதிக அளவில் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். இதனால் லாக்கர்களுக்கான தேவையும் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. ஆனால் தற்போது லாக்கர்களின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளில் சற்று சந்தேகம் எழுந்துள்ளது.

வெளியான ஒரு அறிக்கையின் படி 2014-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டுக்கு இடையில் சுமார் 51 வங்கிகளில் 2632 கொள்ளை சம்பவங்கள் மற்றும் வழிப்பறி சம்பவங்களில் 180 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 2017-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டுக்குள் மட்டும் 972 கொள்ளை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி தோராயமாக ஒரு நாளைக்கு 3 லாக்கர் திருட்டுகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் ஒரு ஆண்டுக்குப் பார்த்தால் மொத்த திருட்டுகள் 20% முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சில சமயங்களில் இது வங்கி ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பராமரிப்பு ஊழியர்களுக்கும் தொடர்புடையதாகவும் உள்ளது. 5 மாதங்களுக்கு முன்பு , மும்பையில் உள்ள SBI பேங்கின் சர்வீஸ் மேனேஜர் ஒருவர் வங்கி லாக்கர்களில் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை திருடியதாக கைது செய்யப்பட்டார்.
வங்கிகளில் வழக்கமாக சிசிடிவி கேமரா பதிவு செய்யும் அம்சத்துடன் இருக்கும். ஆனால் அது திருட்டைத் தடுக்கும் வகையில் செயல்படாது. கொள்ளை நடந்த பிறகு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய முடியும். ஆனால் திருட முயற்சி நடந்தால் தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கைகளை வழங்க அவை அமைக்கப்படவில்லை.
மேலும், வங்கி லாக்கர்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் வங்கி அல்லாத வேலை நேரங்களில், திருட்டு சம்பவங்கள் அதிகம் நடக்கும் நேரங்களில் இருப்பதில்லை. 2018-ஆம் ஆண்டில் 3 பகல் மற்றும் 4 இரவுகள் வங்கி மூடப்பட்டது. அப்போது UCO பேங்க் லாக்கரில் நகை திருடப்பட்டது.
பெரும்பாலான லாக்கர் திருட்டு சம்பவங்களில், வங்கிகள் லாக்கர்களை போதுமான அளவு காப்பீடு செய்யாததாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் மெத்தனமாக இருப்பதாலும், வாடிக்கையாளர்கள் நிதி இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
பாதுகாப்பு வழிமுறைகள்: வங்கியின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கட்டமைப்பை கவனமாக பரிசீலித்து தேர்வு செய்யுங்கள். லாக்கரை வாடகைக்கு எடுப்பதற்கு முன், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் முழுமையாகப் படித்து புரிந்து கொள்ளுங்கள்.
வங்கி லாக்கர்கள் நீண்ட காலமாக நம்பிக்கையான தேர்வாக இருந்து வந்தாலும், பாதுகாப்பு கவலைகள் அதிகரித்து வருகின்றன. திருட்டு, இயற்கை பேரிடர்கள், போதிய காப்பீடு இல்லாதது போன்ற சவால்களை கருத்தில் கொண்டு, நமது மதிப்புமிக்க பொருட்களை வைப்பதற்கான பாதுகாப்பான லாக்கரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications