Bharat Bandh: பிப்ரவரி 12 இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மக்கள் கவலையுடன் கேட்கும் மிகப்பெரிய கேள்வி: "இன்று வங்கிகள் திறந்திருக்குமா? இல்லையா?" என்பது தான். பணம் டெபாசிட், வரத்த்க பரிமாற்றங்கள், பணம் எடுத்தல், EMI செலுத்துதல், ஆன்லைன் பரிவர்த்தனை என பலருக்கு இன்று வங்கி சேவை மிக முக்கியம். ஆனால் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் குழப்பம் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் சுமார் 10க்கும் அதிகாமான தொழிலாளர் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள காரணத்தால் 30 கோடிக்கும் அதிகமான விவசாயிகள், தொழிலாளர்கள், ஊழியர்கள் என இந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

இந்த பாரத் பந்த போராட்டத்தில் AIBEA, AIBOA, BEFI உள்ளிட்ட முக்கிய வங்கி ஊழியர் சங்கங்கள் பங்கேற்கின்றன. இந்த அமைப்புகள் மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 5 நாள் வார வேலை நேரம், தொழிற்சங்க பதிவு எளிமைப்பசுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் உள்ள SBI, Indian Bank, Canara Bank, Indian Overseas Bank கிளைகளில் ஊழியர்கள் பெருமளவு வேலைநிறுத்தத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் சேவைகள் பாதிக்கப்படலாம்.
வங்கிகள் மூடப்படுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ன?
ரிசர்வ் வங்கி (RBI) அல்லது மத்திய அரசு இன்றைய தினத்தை வங்கி விடுமுறையாக அறிவிக்கவில்லை. எனவே அனைத்து வங்கிகளும் அதிகாரப்பூர்வமாக திறந்திருக்கும். ஆனால் பல வங்கிகள் (SBI, Bank of Baroda, UCO Bank உள்ளிட்டவை) பங்குச் சந்தைக்கு அளித்த அறிவிப்பில் "வேலைநிறுத்த அறிவிப்பு வந்துள்ளது,ஆயினும் வங்கி சேவைகளை சீராக நடத்த முயற்சிப்போம்" என்று தெரிவித்துள்ளன.
அதாவது வங்கி கிளைகள் திறந்திருந்தாலும், ஊழியர்கள் குறைவாக இருந்தால் சில கவுண்டர்கள் மட்டும் இயங்கலாம், நீண்ட வரிசை, சேவை தாமதம் ஏற்படலாம் என விளக்கியுள்ளது
தமிழ்நாட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?
தமிழ்நாட்டில் வங்கி ஊழியர்கள் அதிகம் உள்ள நகரங்களில் (சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி) சில கிளைகளில் சேவை மெதுவாக இருக்கலாம். குறிப்பாக ஊரக, கிராம பகுதிகளில் உள்ள சிறிய கிளைகளில் ஊழியர்கள் குறைவாக இருந்தால் ATM-களில் பணம் தீர்ந்தால் நிரப்புவது தாமதமாகலாம். ஆனால் பெரும்பாலான நகர்ப்புற கிளைகள் சீராக இயங்க முயற்சிக்கும் என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் இன்று என்ன செய்யலாம்?
அவசர பணப் பரிவர்த்தனை இருந்தால்:
- YONO, BHIM, PhonePe, Google Pay போன்ற UPI ஆப்கள் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யுங்கள்
- ATM-ல் பணம் எடுக்க வேண்டுமெனில் காலை முன்பே சென்றுவிடுங்கள்
- பெரிய தொகை பரிவர்த்தனை அல்லது காசோலை தேவைப்பட்டால் இன்று தவிர்த்து நாளை செய்யுங்கள்
- வங்கி கிளைக்கு செல்ல வேண்டியிருந்தால் காலை 10 மணிக்கு முன் சென்றுவிடுங்கள்
இன்றைய வேலைநிறுத்தம் தொழிலாளர் உரிமைகள், 5 நாள் வார வேலை நேரம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் வங்கி ஊழியர்கள் பெருமளவு இதில் பங்கேற்க வாய்ப்புள்ளதால் சேவைகள் சற்று பாதிக்கப்படலாம். ஆனால் வங்கிகள் மூடப்படவில்லை - சேவைகள் மட்டுமே சற்று மெதுவாக இருக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications