நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுதினம் இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி வங்கிகள் செயல்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி எந்த மாநிலங்களில் நாளையும் நாளை மறுதினமும் வங்கிகள் செயல்படும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
தற்போது பெரும்பாலான வங்கி சேவைகள் ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ளலாம் என்றாலும் சில சேவைகளை பெற நாம் வங்கிகளுக்கு தான் சென்றாக வேண்டும். எனவே பண்டிகை நாட்களில் வங்கிகள் இயங்குகின்றனவா என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படும் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது என்ற விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.

ஜூன் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுப்பு:
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின் படி ஜூன் மாதத்தில் மட்டும் 12 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. இதில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும். இந்தியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஜூன் 6ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது, பெரும்பாலான பகுதிகளில் ஜூன் 7ஆம் தேதி பக்ரீத் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் நாளை வங்கிகள் செயல்படுமா?
எனவே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின் படி ஜூன் 6ஆம் தேதி அன்று கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் பக்ரீத்தை முன்னிட்டு வங்கிகள் இயங்காது. அதே வேளையில் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் மற்ற மாநிலங்களில் அனைத்து வங்கிகளும் வழக்கம் போல செயல்படும். எனவே தமிழ்நாட்டில் நாளை வங்கிகள் செயல்படுவது உறுதி.
சனிக்கிழமை வங்கிகள் செயல்படுமா?
ஜூன் 7ஆம் தேதி தான் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பக்ரீத் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது. எனவே சனிக்கிழமை அன்று வங்கிகள் இயங்காது அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ந்து 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
ஜூன் 14ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை:
இது தவிர ஜூன் மாதத்தில் வங்கிகள் எந்தெந்த நாட்களில் இந்த மாதம் செயல்படாது என்ற விவரத்தையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. ஜூன் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சாகாதவா என்ற பண்டிகை கொண்டாடப்படுவதால் சிக்கிம் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் வங்கிகள் இயங்காது. ஜூன் 14ஆம் தேதி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகள் இயங்காது.
அடுத்ததாக ஜூன் 27ஆம் தேதி அன்று பூரி ஜெகன்நாத் கோயில் தேர் திருவிழா நடைபெற இருப்பதால் ஒடிசா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டு இருக்கிற.து அடுத்ததாக ஜூன் 28ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை அன்றைய தினம் வங்கிகள் செயல்படாது.வங்கிகள் செயல்படவில்லை என்றாலும் அந்த நாளில் மக்கள் வழக்கம் போல ஆன்லைன் வழியாக தங்களுடைய பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications