ஃபிரெஷர் பணியமர்த்தல் விகிதம் 50% குறைவு! AI-இல் வேலை செய்யும் நிறுவனங்கள்! அப்போ பட்டதாரிகளின் கதி!

சில காலமாகவே புதிய பட்டதாரிகளை பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியமர்த்தும் வேகம் குறைந்து வருகிறது. அதிலும் முன்னணி நிறுவனங்கள் புதிய பட்டதாரிகளை பணியமர்த்துவதை 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைத்துள்ளதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி.

சிக்னல் ஃபயர் என்ற நிறுவனம் பகிர்ந்த தரவுகளின் படி, முன்னணி ஐடி நிறுவனங்களில் எண்ட்ரி லெவல் பணிகளுக்கான பணியமர்த்தல் 2019-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. இதற்கு முன்னர் இது போன்ற நிறுவனங்களில் புதிய பட்டதாரிகளின் பணியமர்த்தல் விகிதம் 15 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை வெறும் 7 சதவீதமாக குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபிரெஷர் பணியமர்த்தல் விகிதம் 50% குறைவு! AI-இல் வேலை செய்யும் நிறுவனங்கள்! அப்போ பட்டதாரிகளின் கதி!

குறிப்பாக இந்தச் சரிவு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்திற்கு நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மாற்றியமைப்பதால் ஏற்பட்ட சரிவாகும். புதிய ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் சேரும்போது வழக்கமாக கையாளும் அனைத்து பணிகளையும் தற்போது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் கையாள்கிறது. இதனால் இளம் தொழில் வல்லுநர்கள் தங்களுடைய பணிப் பயணத்தை தொடங்குவதே கடினமாகி வருகிறது.

சுந்தர் பிச்சை மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்து: மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் தனது நிறுவனத்தில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மிட் லெவல் சாப்ட்வேர் இன்ஜினியரைப் போலவே செயல்படுவதாகக் கூறினார். அடுத்த ஒரு வருடத்திற்குள் மெட்டாவின் லாமா போன்ற பெரிய ப்ராஜெக்ட்களுக்கு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் தானாகவே கோடிங் எழுதும் என்றும் கூறியிருந்தார்.

பிற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் இதே போன்ற திசையில் தான் பயணிக்கின்றன. கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை தற்போது கோடிங் எழுதும் போது 30 சதவீதத்திற்கும் அதிகமான கோடிங்கை AI எழுதுவதாகத் தெரிவித்தார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்திய நாதெல்லா தங்களுடைய நிறுவனத்தில் 30 சதவீதம் AI உருவாக்கும் கோடிங் இருப்பதாகவும் சில திட்டங்களில் மனிதர்களின் தலையீடு இல்லாமல் முழுக்க முழுக்க சாப்ட்வேர் கோடிங் எழுதுவதாகவும் பகிர்ந்து கொண்டார். ஏஐ மீதான நிறுவனங்களின் ஆர்வம் ஏற்கனவே வேலை வாய்ப்புகளை பாதிக்கத் தொடங்கியுள்ளது.

IBM சமீபத்தில் 8000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அவர்களில் பலர் ஹியூமன் ரிசோர்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள். முன்னர் மனிதர்களால் செய்யப்பட்ட பணிகளை தற்போது AI கையாள்கிறது.

வேலை வாய்ப்புகளில் குறைவு ஏற்பட்டாலும் தொழில்நுட்பத் துறை வளர்ந்து வருகிறது. சுகாதாரம், வங்கி, சில்லரை விற்பனை போன்ற பல்வேறு தொழில்களில் தொழில்நுட்பம் அதிகரித்து வருகிறது. அதே அறிக்கையில் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 6 மில்லியனாக இருப்பதாகவும், 2034-ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 7 மில்லியனுக்கும் அதிகமாக வளரும் என்றும் கூறுகிறது.

இருப்பினும் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் வேறுபட்டவைகளாக இருக்கலாம். ஏற்கனவே இருந்த வேலை வாய்ப்புகள் மறைந்து AI தொடர்பான திறன்களுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு தேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கணக்கெடுப்பில் பணியமர்த்திய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 87 சதவீதம் AI திறனுள்ள பணியாளர்களை தேடுவதாகவும், நான்கில் ஒருவர் தான் இப்போது AI திறன்களுடன் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே மொத்த வேலைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். ஆனால் தொழில்நுட்ப உலகில் நுழையும் பட்டதாரிகள் வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப தங்களுடைய திறன்களை வளர்த்துக் கொண்டால் தங்களுக்கென ஒரு வேலை வாய்ப்பை பெறுவது கடினமாக இருக்காது என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களின் கூற்றாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+