சமீபத்திய வாரங்களாகவே இந்திய சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இது சந்தையில் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். சர்வதேச சந்தைகளை காட்டிலும் இந்திய சந்தையானது ஏற்றத்திலேயே இருந்து வருகின்றது.
இதற்கிடையில் ஆசிய சந்தைகளை காட்டிலும் இந்திய சந்தைகள் விலை உச்சத்தில் உள்ளன. அவற்றின் மதிப்பு என்பது அதிகமாக உள்ளது. இது சந்தையில் தற்போதைக்கு அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
வட்டி அதிகரிக்கலாமோ?
தொடர்ந்து சமீபத்திய காலமாக இந்திய நிறுவனங்கள் பலவும் அதன் மூன்றாவது காலாண்டு முடிவினை வெளியிட்டு வருகின்றன. இதற்கிடையில் ரிசர்வ் வங்கி ஆர்பிஐயின் இலக்கிற்குள்ளும் பணவீக்கம் என்பது, இலக்கிற்கு கீழாக உள்ளது. மேலும் பொருளாதார குறியீடுகளும் சாதகமாக காணப்படும் நிலையில், மேற்கொண்டு வட்டி விகிதம் என்பது அதிகரிக்கலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால் சரிவு
இது மேற்கோண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ஜனவரி 24 அன்று அதானி குழுமம் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியானது. இது அதானி குழுமத்தின் 60% மேலான சரிவினை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் என்பது இந்திய சந்தையிலும் ஏற்படுத்தியுள்ளது.
நம்பிக்கை சரிவு
ஆக இது சந்தையில் பெரும் volume-ஐ குறைத்துள்ளது. இதற்கிடையில் சந்தையில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்தின் மத்தியில், சந்தையில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். அன்னிய நிறுவன முதலீட்டாளர்களும், அன்னிய முதலீடுகளும் இந்திய சந்தையில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளது. இது இந்திய சந்தையின் மீதான நம்பிக்கையை தற்காலிகமாக குறைத்துள்ளது எனலாம்.
38 லட்சம் பேர் வெளியேற்றம்
இதற்கிடையில் என் எஸ் இ-தரவின் படி கடந்த 6 மாதத்தில் இருந்து மட்டும் இந்திய சந்தையில் இருந்து 38 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறியுள்ளனர்.
கொரோனா காலகட்டத்தில் ஏதேனும் செய்யலாம் என்ற எண்ணத்தில் சந்தைக்குள் நுழைந்தவர்கள், தற்போது உண்மையான சந்தையினை புரிந்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் வெளியேறியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
50% சரிவு
கடந்த மாதம் ஜெரோதாவின் தலைமை நிர்வாகி நித்தின் காமத், ஜனவரி மாதத்தில் இருந்தே 50% புதிய கணக்குகள் தொடக்கம் என்பது சரிவினைக் கண்டுள்ளது. இது சந்தை முழுவதும் தொடர்ந்து கொண்டுள்ளது.
இது குறித்த தரவில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்தே சரிவினைக் கண்டு வரும் எண்ணிக்கையானது, தற்போது வரையில் சரிவில் காணப்படுகின்றது. இது கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 38 மில்லியன் ஆக இருந்த எண்ணிக்கையானது, ஜனவரி 2023ல் 34.2 மில்லியனராக சரிவினைக் கண்டுள்ளது.
டர்ன் ஓவரும் சரிவு:?
வாடிக்கையாளர்கள் வெளியேற்றத்தின் மத்தியில் கேஸ் மார்கெட்டில் சராசரி டர்ன் ஓவரும் சரிவினைக் கண்டுள்ளது. என் எஸ் இ- தரவின் படி கேஸ் மார்கெட் டர்ன் ஓவர் 10,20,626 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த டிசம்பர் மாதத்தில் 11,60,846 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த நவம்பர் மாதத்தில் 12,01,108 கோடி ரூபாயாக இருந்தது.
தினசரி டர்ன் ஓவர்
இதே போல தினசரி டர்ன் ஓவர் என்பது என் எஸ் இ-யில் ஜனவரி 2023ல் 48,601 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த டிசம்பரில் 52,766 கோடி ரூபாயாக இருந்தது. இதே நவம்பரில் 57,196 கோடி ரூபாயாகவும் இருந்தது. ஆக இதுவும் படிப்படியாக குறைந்து வருவதை காண முடிகிறது. செக்யூரிட்டீஸ் டீமேட்களும் சரிவினைக் கண்டுள்ளது. இதேபோல பிஎஸ்இ-யிலும் டர்ன் ஒவர் என்பது குறைந்துள்ளது. இது கடந்த செப்டம்பரில் 1,18,132.64 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இது ஜனவரி 2023ல் 68,103.37 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
இனி என்னவாகும்
நடப்பு ஆண்டில் இதுவரையில் சென்செக்ஸ் 2.8% சரிவினைக் கண்டும், இதே நிஃப்டி 50 என்பது 4% மேலாக சரிவினைக் கண்டும் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சரியலாமோ என்ற அச்சமும் இருந்து வருகிறது. இதற்கிடையில் இனி வரும் மாதங்களில் என்னவாகும் என்ற நிலையே இருந்து வருகின்றது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications