பெற்றோரின் கடனை மறைவுக்குப் பின் சட்டப்பூர்வ வாரிசு செலுத்த வேண்டுமா? இந்தியச் சட்டம் சொல்வது என்ன?

பெற்றோரை இழப்பது என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்த துயரத்தை சந்தித்த பலருக்கு அடுத்ததாக இறந்தவர்கள் விட்டுச் சென்ற கடன் சிக்கல் பெருந்துயராக இருக்கும். இறந்த பெற்றோரின் கடன்களை உண்மையிலேயே சட்டப்பூர்வ வாரிசுகள் தான் செலுத்த வேண்டுமா? இதற்கு இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது? என்பது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.

இந்தியச் சட்டத்தின்படி சட்டப்பூர்வ வாரிசுகள் தங்கள் மறைந்த பெற்றோரின் சார்பாக செலுத்தப்படாத கடன்களை செலுத்த கடமைப்பட்டவர்கள் கிடையாது. ஆனால் இதற்கும் ஒரு சில விதிமுறை இருக்கிறது. ஒரு வேலை அந்த கடனுக்கு இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் கூட்டாக கையெழுத்துப் போட்டிருந்தாலோ? அல்லது உத்தரவாதம் அளித்திருந்தாலோ வேறு வழியே இல்லை.

பெற்றோரின் கடனை மறைவுக்குப் பின் சட்டப்பூர்வ வாரிசு செலுத்த வேண்டுமா? இந்தியச் சட்டம் சொல்வது என்ன?

வாரிசாக இருப்பவர்கள் தான் கடனைச் செலுத்த வேண்டும். ஆனால் வெறும் வாரிசாக மட்டும் இருந்து விட்டால் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டிய கடமை எதுவும் வந்துவிடாது. மற்றொரு நிபந்தனை என்னவென்றால் வாரிசுகளுக்கு இறந்தவர் விட்டுச் சென்ற சொத்து பணம் அல்லது வேறு எதுவும் சொத்துக்கள் கிடைத்தால்.. அத்தகைய சூழ்நிலையில் கடன் வழங்கியவர்கள் வாரிசுகளுக்கு சொத்துக்களை வழங்குவதற்கு முன்பே இறந்தவரின் சொத்தில் இருந்து கடன் தொகையை வசூலிக்கச் சட்டம் அனுமதிக்கிறது.

பிணையம் இல்லாத கடன்கள்: தனி நபர் கடன்கள், கல்வி கடன்கள், கிரெடிட் கார்டு நிலுவைகள் போன்றவை பிணையம் இல்லாமல் வழங்கப்படும் கடன்களாகும். இதற்கு எந்த சொத்தும் அடமானமாக வைக்கப்படுவதில்லை. உதாரணமாக தங்கக் கடன் பெறும்போது தங்கத்தை பிணையமாக வைத்து பணம் பெறுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் பிணையம் இல்லாத பட்சத்தில் கடன் அளித்தவர் இறந்தவர்களின் பிற சொத்துக்களில் இருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க முடியும்.

உதாரணமாக வங்கி கணக்குகள், அவர்களுடைய பிக்சட் டெபாசிட்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், நகைகள், சொத்துக்கள் போன்ற எந்த ஒரு பணம் அல்லது பொருள் ரீதியான சொத்தில் இருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கலாம். இறந்தவரின் இது போன்ற சொத்து மதிப்பு நிலுவையில் உள்ள கடன்களை ஈடுகெட்ட போதுமானதாக இருந்தால்.. அவை அதிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். அப்படி இல்லை என்றால் மீதமுள்ள தொகை பொதுவாக கடன் வழங்கியவரால் தள்ளுபடி செய்யப்படும். இறந்தவரின் சொத்தில் இருந்து எதையும் பெறாத சட்டப்பூர்வ வாரிசுகள் தங்கள் சொந்த வருமானம் அல்லது சேமிப்பின் மூலம் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

பிணையம் வைத்து பெறப்படும் கடன்கள்: வீட்டுக் கடன்கள், வாகனக் கடன்கள் போன்ற பிணையக் கடன்களை வாங்கி இருந்தால்.. கடன் வாங்கியவர் இறந்தவுடன் அடமானமாக வைக்கப்பட்ட சொத்தை விற்று, நிலுவையில் உள்ள தொகையை வசூலிக்க கடன் அளித்தவர்களுக்கு உரிமை உண்டு.

ஒரு வேலை அந்த சொத்தை விற்கக் கூடாது அல்லது வாகனத்தை விற்கக் கூடாது என்று விரும்பும் சட்டபூர்வ வாரிசுகளாக இருந்தால் அவர்களே கடனை ஏற்று அடைக்க வேண்டும். அதாவது தங்களுடைய பெயருக்கு கடனை மாற்றி தவணையைச் செலுத்த வேண்டும். ஆனால் வங்கிகள் வாரிசின் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் கடன் தகுதியை மதிப்பீடு செய்த பிறகே இந்த மாற்றத்துக்கு வங்கிகள் ஒப்புதல் வழங்கும். வாரிசுகள் கடனை ஏற்க விரும்பவில்லை என்றால் சட்டபூர்வ மீட்பு நடவடிக்கைகளின் மூலம் சொத்து வங்கியால் பறிமுதல் செய்யப்படும்.

கூட்டுக் கடன்கள்: சட்டப்பூர்வ வாரிசுகள் கடன் பெற்றவருக்கு ஏற்கனவே உத்தரவாதம் அளித்தவராகவோ அல்லது கூட்டுக் கடன் வாங்கியவராகவோ இருந்தால் அவர்களே கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்த பொறுப்பாவார்கள். ஒரு வேளை இறந்தவர்களின் சொத்தில் இருந்து எதையும் பெற்றாரா? இல்லையா? என்பதை எல்லாம் வங்கிகள் பொருட்படுத்தாது. கூட்டு கடன் வாங்கியவர் அல்லது உத்திரவாதம் அளித்தவர் கடனின் தொடக்கத்தில் இருந்து சட்டப் பூர்வ பொறுப்பை தானாகவே ஏற்றுக்கொள்கிறார். எனவே கடன் வாங்கியவரின் மறைவுக்குப் பிறகு முழு சுமையையும் உத்தரவாதம் அளித்தவர் செலுத்த வேண்டியிருக்கும்.

கிரெடிட் கார்டு கடன்கள் மற்றும் பர்சனல் லோன்கள்: கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் போன்ற பிணையம் இல்லாமல் வழங்கப்படும் கடன்களாக இருந்தால் வங்கி முதலில் அவருடைய பிக்சட் டெபாசிட், வங்கி கணக்கு பேலன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு கடனை வசூலிக்க முயற்சி செய்யும். இது போன்ற சொத்துக்கள் போதுமானதாக இல்லாமல் இருந்து, வாரிசு கூட்டு கடன் வாங்கியவராக இருந்தால் அவர்கள் கடனைச் செலுத்த வேண்டும்.

அப்படி இல்லை என்றால் கடன் தள்ளுபடி செய்யப்படும். சில சூழ்நிலையில் கிரெடிட் கார்டை இருவரும் சேர்ந்து பெற்றிருந்தால் யாருடைய விருப்பத்தின் பெயரில் செலவு செய்யப்பட்டது எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பதை எல்லாம் பொறுத்து கடன் வசூலிக்கப்படும்.

சட்டபூர்வமாக எந்தப் பொறுப்பும் இல்லாத நிலையில் குடும்ப உறுப்பினர்களைத் திருப்பிச் செலுத்தும் படி கடன் அளித்தவர்கள் கேட்க முடியாது. வாரிசுகள் இறந்தவரின் கடன்களை திருப்பி செலுத்துவதற்கு சட்டபூர்வ ஆலோசனை பெறுவது அவசியம். தங்கள் பங்கை பெறுவதற்கு முன்பு அனைத்து கடன்களும் சொத்தில் இருந்து தீர்க்கப்பட வேண்டும். எனவே இறந்தவரின் சொத்தை கையாளும்போது குறிப்பாக பெரிய அளவிலான கடன்கள் இருந்தால் ஒரு சட்ட நிபுணர் அல்லது நிதி ஆலோசகரை அணுகலாம். அதோடு கடன் வாங்கியவர் உயிரோடு இருக்கும்போதே உயில் எழுதி வைப்பது, ஆயுள் காப்பீட்டைப் பெறுவது போன்றவற்றை செய்து வைத்திருந்தால் வாரிசுகள் எதிர்பாராத நிதி சுமையால் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+