இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருதி மக்கள் அதிகளவில் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான பாத்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். விலை மலிவாக இருந்ததால் ஒரு காலத்தில் பிளாஸ்டிக் கப் மிகப் பிரபலமாக இருந்தது. இப்போது அதன் இடத்தை பேப்பர் கப்கள் பிடித்துவிட்டன.
இருப்பினும் அதன் பாதுகாப்புத் தன்மை குறித்து இப்போது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ பேப்பர் கப்களின் பின்னணியில் உள்ள யதார்த்தத்தையும் அதன் மோசமான விளைவுகளையும் பற்றி விவரிக்கிறது.

@bizbux_ என்ற இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் ஆலேக் கபூர் என்பவருக்குச் சொந்தமானது. அவர்தான் இந்த விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நாம் நினைப்பது போல பேப்பர் கப்கள் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பனது அல்ல என்பது குறித்து உதாரணங்களுடன் சுட்டிக் காட்டியுள்ளார்.
அந்த விடியோவில் ஒரு பேப்பர் கப்பை எடுத்து அதன் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறார். அதில் நமக்கு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. பேப்பர் கப்பின் வெளிப்புறம் மட்டுமே காகிதத்தால் ஆனது. உட்புறம் பிளாஸ்டிக்கால் பூசப்பட்டுள்ளது.
இப்படி மறைவாக உள்ள பிளாஸ்டிக் பூச்சு அந்த கப்பில் ஊற்றப்படும் திரவங்களுடன் வினையாற்றி ஆபத்தான ஃப்ளூரைடு, குளோரைடு, மைக்ரோ பிளாஸ்டிக்குகளை வெளியிடுகிறது. இதனால் பேப்பர் கப்பில் நாம் சாப்பிடும் பானங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது.
இதை கபூர் தனது விடியோவில் ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். விடியோவைப் பார்த்தால் அவர் சொல்வது உண்மை என்று புரியும். இந்த விடியோவை பார்த்து ஏகப்பட்ட நெட்டிசன்கள் பலவாறு கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்.
பிளாஸ்டிக் கப்பைக் காட்டிலும் பேப்பர் கப்களில் குறைந்த அளவு பிளாஸ்டிக் தான் பயன்படுத்தப்படுவதாக ஒரு பதிவர் கருத்து கூறியுள்ளார். ஒரு ரூபாய் விலையுள்ள பேப்பர் கப்பில் பல தாதுப்பொருட்களை தயாரிக்க முடியும் போலவே என்று மற்றொரு பதிவர் வேடிக்கையாகக் கூறியுள்ளார்.
இந்த விடியோ பரபரப்பாகப் பகிரப்படுகிறது. இதுவரை 58,000 பேர் பார்த்துள்ளனர். 16 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன.
இந்த விடியோ சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானது எனப் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள அபாயம் பற்றிய விழிப்புணர்வை நுகர்வோருக்கு ஏற்படுத்தும் விதமாக இருக்கின்றது.
இதுபோன்ற பொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications