இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் இந்தியாவின் தொழில் நுட்ப ஜாம்பவான் ஆன இன்ஃபோசிஸ் நாரயண மூர்த்தியின் மருமகனான ரிஷி சுனக், தற்போது இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தியின் நிகர சொத்து மதிப்பானது, இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸினை விட அதிகம் என்றும் கூறப்படுகின்றது.
உண்மையில் இவர்களின் சொத்து மதிப்பு தான் எவ்வளவு? மன்னர் சார்லஸின் சொத்து மதிப்பு எவ்வளவு? வாருங்கள் பார்க்கலாம்.
எவ்வளவு சொத்து மதிப்பு?
ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி தம்பதிகளின் சொத்து மதிப்பு 730,000,00 பவுண்டாகும். இது இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் சொத்து மதிப்பினை விட இரு மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகின்றது.
மூன்றாம் சார்லஸ் மன்னரின் மற்றும் கமிலாவின் சொத்து மதிப்பானது 300 மில்லியன் பவுண்டுகள் முதல் 350 மில்லியன் பவுண்டுகள் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணக்காரர்கள் பட்டியலில்
இந்த காதல் தம்பதியினர் நடப்பு ஆண்டு மே மாதத்தில் 730,000,000 பவுண்டுகள் அல்லது 837 மில்லியன் டாலர்கள் நிகர மதிப்புடன், தி ஷ்ண்டே டைம்ஸ் பணக்காரர் பட்டியலில் 222வது இடத்தில் இருந்தனர்.
சுனக் தம்பதியினரின் சொத்து மதிப்பின் ஒரு பகுதி பங்கு அக்ஷதா மூர்த்தியின் இன்ஃபோசிஸ் பங்கில் இருந்தும் வருகின்றது. இன்ஃபோசிஸ் நிறுவனம் அக்ஷதா மூர்த்தியின் தந்தையால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
அக்ஷதா மூர்த்தியின் வசம்
செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அக்ஷதா மூர்த்தி 0.93% அல்லது 3,89,57,096 பங்கினை வைத்துள்ளார்.
இது குறித்து நிறுவனத்தின் தரவின் படி, மூர்த்தி இன்ஃபோசிஸ் தனது பங்குகளின் மூலம் டிவிடெண்ட் தொகையினை பெற்றார். அக்டோபர் 27 வரையிலான காலகட்டத்தில் 64.27 கோடி ரூபாய் மதிப்பிலான டிவிடெண்டுக்கு தகுதி பெற்றுள்ளார்.
பல நிறுவனங்களில் பங்கு
இன்ஃபோசிஸ் பங்கு தவிர பிரிட்டீஸ் ஆடைகள் பிராண்டான நியூ & லிங்வுட் மற்றும் பிசிகல் பிட்னஸ் நிறுவனமான டிக்மே ஃபிட்னஸின் இயக்குனர்களில் ஒருவராகவும் உள்ளார். இது தவிர கேடமரன் வென்ச்சர்ஸ்-ன் இயக்குனராகவும் உள்ளார். இது மட்டும் அல்ல இன்னும் பல நிறுவனங்களில் பங்குகளை வைத்துள்ளார்.
சுனக் தம்பதியரின் சொத்துகள்?
இது தவிர இந்த இளம் ஜோடியினர் இங்கிலாந்து மற்றும் கலிபோர்னியாவில் 4 மிகப்பெரிய சொத்துகளையும் வைத்துள்ளனர். இதில் கென்சிங்டனில் 7 மில்லியன் பவுண்டுகள் மதிப்பு கொண்ட 5 அறைகள் கொண்ட வீடும், 1.5 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள யார்ஷயரில் உள்ள 12 ஏக்கர் ஜார்ஜியன் மாளிகை, மேற்கு லண்டனில் உள்ள ஓல்ட் பிராம்ப்டன் சாலையில் உள்ள ஒரு பிளாட் மற்றும் 5.5 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள சாண்டா மோனிகா கடற்கரை பெண்ட்ஹவுஸ் ஆகியவையும் இதில் அடங்கும்.
மன்னர் சார்லஸ், கமிலா நிகர மதிப்பு
மூன்றாம் மன்னர் சார்லஸ் அவரது மனைவி கமிலாவின் நிகர சொத்து மதிப்பு 300 - 350 மில்லியன் பவுண்டுகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் முக்கிய வருமான ஆதாரங்கள் கிரவுன் எஸ்டேட் மற்றும் டச்சி ஆஃப் கார்ன்வால் ஆகும். இவை அனைத்தும் ராணி எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு இவர்கள் பெற்றுள்ளனர்.
மன்னர் குடும்பத்தின் சொத்துகள்
கிரவுன் எஸ்டேட்-ன் மதிப்பு 19.5 பில்லியன் டாலராகும். பக்கிங்ஹாம் அரண்மனையின் மதிப்பு 4.9 பில்லியன் டாலராகும். டச்சி ஆஃப் கார்ன்வால் 1.3 பில்லியன் டாலராகும். டச்சி ஆஃப் லாங்காஸ்டர் 748 மில்லியன் டாலர் என்றும், கென்சிங்டன் பேலஸ் - 630 மில்லியன் டாலரும், கிரவுன் எஸ்டேட்ஸ்காட்லாந்தின் மதிப்பு 592 மில்லியன் டாலர்களாகும்.
என்னென்ன அடங்கும்
கிரவுன் எஸ்டேட் என்பது 15.6 பில்லியன் பவுண்ட் மதிப்புடைய நிலங்கள் மற்றும் பிற சொத்துக்கள் அடங்கும். இது சுமார் 16000 ஏக்கர் நீளமுள்ள வின்ட்சர் கோட்டையை கொண்டுள்ளது. இது தவிர வனப்பகுதி மற்றும் அஸ்கார்ட் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பலவும் அடங்கும். இது தவிர இதில் பல விதமான விலை அதிகமான கலை படைப்புகளும் அடங்கும்.
காத்திருக்கும் சவால்கள்
உச்சத்தில் உள்ள பணவீக்கம், உயரும் வட்டி விகிதங்களால் இங்கிலாந்து பொருளாதாரம் பெரும் சவாலை எதிர்கொள்ளலாம். உயர்ந்து வரும் எரிபொருள் விலை, நாணயச் சந்தைகளில் டாலருக்கு எதிரான பவுண்டு மதிப்பு சரிவு, மொத்தத்தில் சரிவு பாதையில் சென்று கொண்டுள்ள இங்கிலாந்து பொருளாதாரத்தினை மீட்பதே சுனக்கிற்கு பெரும் சவாலாக இருக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications