சந்தையில் தற்போது 10 ரூபாய் நோட்டுகள், 20 ரூபாய் நோட்டுகள் மற்றும் 50 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சந்தையில் இதுபோன்ற நோட்டுகளுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார், இந்த நோட்டுகளை அச்சிடுவதை இந்திய ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தாகூர் எழுதியுள்ள கடிதத்தில், சந்தையில் இந்த நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும், ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டை போக்க நிர்மலா சீதாராமான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் மொத்த கரன்சியில் ரூ.500 நோட்டுகளின் பங்கு மார்ச் மாதம் 2024 வரை 86.5 சதவீதமாக இருந்தது.
மார்ச் 31, 2024 நிலவரப்படி ரூ.500 மதிப்பு 5.16 லட்சம் ரூபாய் நோட்டுகள் உள்ளன, 10 ரூபாய் நோட்டுகள் 2.49 லட்சமாக உள்ளன என்று வருடாந்திர அறிக்கையில் கூறப்டுள்ளது. இந்தச் சிறிய தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் 5,101 கோடி ரூபாய் செலவிட்டு நோட்டுகளை அச்சடித்துள்ளது. அதே சமயம், ஓராண்டுக்கு முன், இதே காலகட்டத்தில், அதாவது 2022 முதல் 2023-ஆம் நிதியாண்டில் நோட்டுகளை அச்சடிக்க, ரிசர்வ் வங்கி, 4,682 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
மாணிக்கம் தாகூர் நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், "ரூ. 10, 20 மற்றும் ரூ. 50 மதிப்புள்ள கரன்சி நோட்டுகளின் கடுமையான தட்டுப்பாடு மிகுந்த சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது... டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான வளர்ச்சி அதிகரித்துள்ளது என்றாலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை செய்ய முடியாமல் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாட்டு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
UPI மற்றும் ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்தியுள்ளதாக தாகூர் கடிதத்தில் எழுதினார். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் முயற்சி என்றாலும், இந்த நோக்கத்திற்காக நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்துவதற்கான நடவடிக்கை டிஜிட்டல் கட்டண வசதி இல்லாதவர்களை, குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்களை பாதிக்கிறது என்றார்.
தினசரி பரிவர்த்தனைகளுக்கு 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் அவசியம். இவற்றின் பற்றாக்குறையால், பண பரிவர்த்தனையையே பெரிதும் நம்பியுள்ள சிறு வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள், தினக்கூலிகள் என பலரும் சிரமங்களை சந்திக்கின்றனர். சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விநியோகிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு இந்த நோட்டுகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications