சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலால் பல உயிர்கள் பறிபோனது. இந்த சோகமான நிகழ்வு, இது போன்ற சம்பவங்களால் ஏற்படும் மரணங்களுக்கு ஆயுள் காப்பீட்டுப் பாலிசிகள் பாதுகாப்பு அளிக்குமா? என்ற கேள்வியை முன் வைத்துள்ளது. பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் இது போன்ற தீவிரவாதத் தாக்குதலால் ஏற்படும் மரணத்தை உள்ளடக்கியே காப்பீடு வழங்குகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது.
நிபுணர்களின் கருத்துப்படி, இந்தியாவில் வழங்கப்படும் பெரும்பாலான ஆயுள் காப்பீடுகளுக்கு பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்படும் மரணத்தை உள்ளடக்கியே கவரேஜ் வழங்கப்படுகிறது. ஆனால் பாலிசி விதிமுறைகளில் இது குறிப்பிடப்படாமல் இருந்தால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு கண்டிப்பாக காப்பீடு கிடைக்காது. ஒருவேளை அப்படி குறிப்பிடப்பட்டிருந்தால் அதன் மூலம் கண்டிப்பாக இழப்பீடு கிடைக்கும்.

டேர்ம் இன்சூரன்ஸ் எனப்படும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் இது போன்ற தாக்குதல்களால் ஏற்படும் மரணத்திற்கு காப்பீடு கிடைக்கிறது. பாலிசியில் மரணம் எப்படி நிகழ்ந்தாலும் பாதுகாப்பு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தால் இந்த தீவிரவாத தாக்குதலும் அதில் அடங்கும். மாறாக சில காரணங்களால் ஏற்படும் மரணங்களுக்கு காப்பீடு கிடைக்காது என்று தெளிவாக கூறப்பட்டிருந்தால், அந்த விஷயங்களுக்கெல்லாம் காப்பீடு கிடைக்காது.
ஆக பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசி ஆவணத்தில் என்னென்ன விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது? என்பதை கவனமாகப் படிக்க வேண்டும். தீவிரவாத தாக்குதலால் ஏற்படும் மரணத்திற்கு காப்பீடு கிடைக்குமா? என்பதும் அந்த ஆவணத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். 2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் 22-ஆம் தேதியன்று பஹல்காமில் நடந்த துயரமான தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு 26 நபர்களின் உயிர் பறிபோனது. இந்த நபர்களுக்கு இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் விரைவில் செயல்பட்டு நிவாரணம் வழங்கியது.
பஹல்காம் தாங்குதலில் பாதிக்கப்பட்ட சோமிசெட்டி மதுசூதன் என்ற நபர் நியமித்த நாமினியை உடனடியாக எல்ஐசி நிறுவனம் தொடர்பு கொண்டு அவருடைய உரிமை கோரலை தீர்த்து வைத்தது. அதோடு பாதிக்கப்பட்டவரின் உடல் காஷ்மீரில் இருந்து ஆந்திராவில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு விமானத்தில் கொண்டு செல்வது உட்பட பல விஷயங்களையும் சில மணி நேரத்திற்குள் செய்து முடித்தது.
எல்ஐசி நிறுவனத்தின் கிளை மேலாளர் கூறுகையில், "பாதிக்கப்பட்ட நபர்களின் உரிமை கோரல் அனைத்தும் விரைவாக தீர்க்கப்பட்டது. மேலும் பணம் நேரடியாக நாமினியின் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டது. இது போன்ற சூழ்நிலையில் துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்", என்று கூறினார்.
பாலிசி நிறுவனங்கள் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன?: சமீபத்தில் நடந்த இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக எல்ஐசி நிறுவனம் குடும்பங்களுக்கு உதவ பல விஷயங்களை எளிதாக்கியுள்ளது. உதாரணமாக உரிமை கோரல்களுக்கு தேவைப்படும் ஆவண தேவைகளை மாற்றியமைத்துள்ளது.
குடும்பங்கள் மாநில அல்லது மத்திய அரசின் மூலம் பெறப்பட்ட இழப்பீட்டுச் சான்றிதழ், இறப்பு சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பித்து விரைவில் உரிமை கோர முடியும். அப்படி இல்லை என்றாலும் எல்ஐசி-யின் உதவி எண் மற்றும் உள்ளூர் கிளைகள் மூலம் உதவியைப் பெறலாம்.
ஹெச்டிஎஃப்சி லைஃப் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிறுவனமும் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிமை கோரல் செயல்முறையை நெறிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications