இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்குவது என்பது மிக எளிதான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆதார் மற்றும் பான் எண் இருந்தால் மட்டுமே போதுமானது.
நிமிடங்களில் ஆன்லைனில் கடனுக்கு விண்ணப்பித்து கடன் பெற முடியும். அந்தளவுக்கு கடன் சேவை நிறுவனங்கள் பல ஆப்களை கொண்டுள்ளன.
அந்த வகையில் தனி ஆப் அல்லது இந்தியாபுல்ஸ் நிறுவனங்களை பற்றியும் கேள்வி பட்டிருப்போம்.
பான் எண் தவறாக பயன்பாடு
மீடியா துறை சார்ந்த ஆதித்யா கல்ரா, தனது பெயர் மற்றும் பான் எண்களை பயன்படுத்தி, தன்னுடைய அனுமதியின்றி, யாரோ ஒருவருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்த அவரது பதிவில் சமீபத்தில் எனது கிரெடிட் அறிக்கையை பார்த்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
வேறு ஒருவருக்கு கடன்
என்னுடைய பான் எண் மற்றும் முகவரியினை பயன்படுத்தி இந்தியாபுல்ஸ் ஆப்பில், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள சில பயனர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த ஆவணமும் இல்லை. எப்படி எனது பான் எண் மூலம் பிறருக்கு பணம் செலுத்த முடியும். இது எப்படி நடந்தது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்கீரின் ஷாட்
அதுமட்டும் அல்ல சிபில் அறிக்கையில் இருந்து கடன் பற்றிய தகவலின் ஸ்கீரின் ஷாட்டையும் கல்ரா பகிர்ந்துள்ளார். ஆவணங்களின் படி வழங்கப்பட்ட தொகை 1,000 ரூபாய். அது நவம்பர் 14, 2021 நிலவரப்படி கொடுக்கப்பட்டுள்ளது. கடனை பெற்றவர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. நிலுவையில் உள்ள தொகை 9945 ரூபாய். இதே ஓவர் டியூ தொகை 5126 ரூபாய் தொகை என உள்ளது.
கவனமாக இருங்கள்
உண்மையில் எளிதில் விரைவில் கடன் கிடைக்கிறது என, பிரச்சனை தெரியாமல் கடன் வாங்கி விட்டு அவதிப்படுபவர்கள் ஏராளம். கல்ரா போன்றோரின் பிரச்சனையும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது. ஆக இனியேனும் கடன் வாங்கும் முன்பு அலசி ஆராய்ந்து சரியான நிறுவனத்தில் வாங்க வேண்டும். அதோடு கல்ராவின் பிரச்சனைகளை போன்று வராமல் தடுக்க அவ்வப்போது கிரெடிட் ரிப்போர்டினை வாங்கி சரி பார்த்துக் கொள்வதும் நல்லது.


Click it and Unblock the Notifications