பெங்களூரு: சரியான தூங்கு மூஞ்சி எப்ப பாரு தூங்கிட்டே இருக்க இப்படி அடிக்கடி உங்களை பற்றி உங்களை சுற்றி இருக்கிறவங்க சொல்றாங்களா? நீங்க தான் இந்த வேலைக்கு கூறுகிறார்கள் என்றால் இந்த வேலைக்கு நீங்கள் தான் பொருத்தமானவர்கள்.
பெங்களூருவை சேர்ந்த மெத்தை நிறுவனமான வேக் ஃபிட் ஸ்லீப்பிங் இன்டெர்ன்ஷிப் என்ற ஒரு இன்டர்ன்ஷிப்பை தொடங்கியுள்ளது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் கிடையாது ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கினால் மட்டும் போதும். அதற்கு வேக் ஃவிட் நிறுவனம் உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை பரிசு தொகையாக வழங்க இருக்கிறது. இந்த வேலைக்கு அவர்கள் ஸ்லீப் இன்டர்ன் என பெயரிட்டு உள்ளார்கள்.

இரண்டு மாத காலங்களுக்கு நீங்கள் இதில் பங்கேற்க வேண்டும். உங்களுக்கு 1 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பரிசுத் தொகையாக கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நீங்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்க வேண்டும் பகலில் 20 நிமிடங்களுக்கு ஒரு சிறு தூக்கம் இடவேண்டும். இதுதான் வேக் ஃவிட் நிறுவனம் உங்களுக்கு வழங்கக்கூடிய நிபந்தனை. இதற்காக வேக் பிட் நிறுவனமே உங்களுக்கு இலவசமாக மெத்தையை வழங்கி விடுகிறது.
இப்படி நடப்பாண்டில் நடத்தப்பட்ட போட்டியில் ஒரு பெண் ஸ்லீம் சாம்பியன் ஆகி 9 லட்சம் ரூபாய் பரிசு தொகை வென்றுள்ளார். சைஸ்வாரி பாட்டில் என்ற பெங்களூரு பெண் "ஸ்லீப் சாம்பியன் ஆஃப் தி இயர்" என்ற பட்டத்தையும் 9 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் பரிசாக பெற்றிருக்கிறார்.
இந்த நிறுவனம் நடத்திய ஸ்லீப் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் 99 சதவீத மதிப்பெண்களை பெற்று முதலிடம் வந்துள்ளார். கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் இந்த போட்டிக்காக விண்ணப்பம் செய்த நிலையில் 15 பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் இவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்த இளம் பெண் முதலிடத்தை பெற்றுள்ளார்.
தூக்கத்தின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு போட்டியினை நடத்துவதாக வேக் ஃபிட் நிறுவனம் கூறுகிறது. அடுத்த ஆண்டு ஸ்லீப் சாம்பியன் போட்டிக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுவதாகவும் தங்கள் நிறுவன இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்றும் வேக் ஃபிட் தெரிவித்துள்ளது.
இந்த வேலை வேண்டுமென விரும்புபவர்கள் எந்த ஒரு விஷயத்திற்காகவும் தூக்கத்தை தவற விடாதவர்களாக , இருக்க வேண்டும். அதாவது அலுவலக அழைப்புகள், வேலைகள் , வெளியிடங்களுக்கு செல்ல போடப்பட்ட திட்டங்கள் என எதுவாக இருந்தாலும் தூக்கத்துக்காக அவற்றை கைவிட வேண்டும். இந்த தகுதிகள் அனைத்தும் இருக்கிறது என்றால் நிச்சயமாக நீங்களும் வேக் ஃபிட் தளத்திற்கு சென்று விண்ணப்பம் செய்யலாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications