சென்னை: இந்த காலகட்டத்தில் கார் வாங்குவது என்பது மிகவும் எளிதான விஷயமாக மாறியுள்ளது. கையில் கொஞ்சம் பணம் வைத்துக்கொண்டு அதை முன்பணமாக செலுத்தி ஒரு காரை லோன் போட்டு வாங்கி விடலாம். அந்தளவுக்கு சர்வசாதாரணமான விஷயமாகிப் போய்விட்டது.
இதற்கு முக்கியக் காரணம் மிக எளிதாக கார் லோன்களை வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் தருகின்றன. கார் லோன்களுக்கான வட்டி விகிதமும் குறைவாகவே உள்ளன. அதிக முன்பணமும் செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை.

முழுப்பணத்தையும் செலுத்தி கார்களை வாங்குவதெல்லாம் இப்போது நடைமுறை கிடையாது.
கார் கடன் வாங்கி அதை தவணையில் எளிதாகத் திரும்பச் செலுத்திவிடலாம். திரும்பச் செலுத்தும் காலம் ஒன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை தேர்வு செய்யலாம். கார் லோன்களுக்கு வட்டி தவிர வேறு சில செலவுளும் உண்டு. எனவே கார் வாங்கும் முன்பாக அது பற்றியும் நன்றாக யோசித்துக் கொள்ள வேண்டும்.
கார் வாங்குமுன் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய செலவீனங்கள்: இதில் கார் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் முக்கியமான அம்சமாகும். பல்வேறு நிதி நிறுவனங்கள் பலவிதமான வட்டி விகிதங்களை நிர்ணயித்துள்ளன. எனவே அனைத்து வட்டி விகிதங்களையும் ஒப்பிட்டு அதில் எது குறைவானதோ அதையே தேர்வு செய்வது புத்திசாலித்தனமாகும்.
காலம் மற்றும் முன்பணம்: நீங்கள் கடனைத் திரும்பச் செலுத்தும் காலத்தைப் பொறுத்து வட்டி விகிதங்கள் மாறக்கூடும். நீண்டகாலக் கடன் மாதாந்திர தவணைத் தொகையை குறைக்கும். இருந்தாலும் அதனால் கூடுதல் வட்டித்தொகை செலுத்த வேண்டும். முன்பணம் அதிகமாக செலுத்தினால் கடன் தொகை குறையும். இதனால் கடனுக்கான வட்டியும் குறைகிறது. கடன் பாரத்தை குறைக்க அதிக முன்பணத்தை செலுத்துவது நல்லது.
கட்டணம் மற்றும் அபராதம்: கடன் தரும் நிறுவனங்கள் கடனுக்காக பிராசஸிங் கட்டணத்தை நிர்ணயிக்கும். கடன் தொகையில் இந்தக் கட்டணம் எவ்வளவு என்பதை கடன் வாங்குபவர் நன்றாக விசாரித்துக் கொள்ள வேண்டும். சில நிறுவனங்கள் கடனை முன்கூட்டி செலுத்தினால் அபராதம் விதிக்கக் கூடும். எனவே முன்கூட்டி பணம் செலுத்தும் வாய்ப்பிருப்பவர்கள் இதுபோன்ற தண்டத் தொகை பற்றி அறிந்து கொள்வது நல்லது.
இன்சூரன்ஸ் மற்றும் இதர கட்டணங்கள்: கார் கடன் வாங்குபவர்கள் காருக்கு இன்சூரன்ஸ் வாங்க வேண்டும். இது செலவை அதிகரிக்கும். வெவ்வேறு நிறுவனங்களின் இன்சூரன்ஸ் பாலிஸிகளை ஒப்பிட்டு குறைந்த கட்டணத்தைக் கொண்டதை வாங்க வேண்டும்.
காரின் உண்மையான விலை: கார் வாங்கும்போது அதன் அசல் விலையுடன் இதர செலவினங்களையும் கணக்கிட வேண்டும்.
கார் விலை மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன்: கார் எக்ஸ்-ஷோ ரூம் விலையுடன் வரிகள், இதரக் கட்டணங்கள் சேரும். இந்தியாவில் காரை பதிவு செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இது காரின் விலை மற்றும இன்ஜின் திறனைப் பொறுத்து மாறும்.
சாலை வரி ஒரு முறை செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.
இன்சூரன்ஸ் பிரீமியம்: இந்தியாவில் வாங்கப்படும் எல்லா வாகனங்களுக்கும் காப்பீடு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பிரீமியம் காரின் தயாரிப்பு, மாடல், காலம், இன்சுரன்ஸ் நிறுவனத்தின் விதிமுறைகள் ஆகிய அம்சங்களின் பேரில் இருக்கும்.
பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவு: தொடர்ச்சியான பராமரிப்பு, சர்வீஸ், ரிப்பேர் ஆகியவை காரின் விலையில் சேரும். எரிபொருள் விலை, கார் மைலேஜ் கட்டாயமாக கார் வைத்திருப்பவர்களின் பாக்கெட்டைப் பிடிக்கும்.
கடனில் கார் வைத்திருப்பது, வட்டித் தொகை, கடன் திருப்பிச் செலுத்தும் காலம், அட்வான்ஸ் செலுத்துதல், பிராசஸிங் கட்டணம் போன்ற பல செலவீனங்கள் கொண்டது.
வாகனத்தின் விலையுடன் இன்சூரன்ஸ், மெயின்டனன்ஸ், ஃபியூயல் போன்ற இதர செலவுகளும் இதில் அடங்கும். இந்தச் செலவுகளை பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு கார் வைத்திருக்க ஆகும் மாதாந்திர செலவுகளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த எடுத்துக்காட்டை பார்ப்போம். 5 ஆண்டுகளுக்கு 9% கார் கடனில் ரூ.10 லட்சம் பெட்ரோல் கார் ஒன்றை வாங்குவதாக வைத்துக் கொள்வோம்.
உங்கள் லைப்ஸ்டைல், காரின் பயன்பாடு, எரிபொருள் செலவு, பார்க்கிங் மற்றும் மெயின்டனன்ஸ் செலவுகள் போன்றவை காருக்குக் கார் வேறுபடலாம்.
எனவே கார் கடனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அதன் விலையை மதிப்பிடுவது முக்கியம். கார் கடன்களை நீண்ட காலம் திருப்பிச் செலுத்தும் வசதி உள்ளது.
அதனால் கடன் வாங்குபவர்கள் வட்டி, இன்சூரன்ஸ், மெயின்டனன்ஸ் செலவுகள் உட்பட அனைத்து செலவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
நீங்கள் டிரைவரை வேலைக்க வைத்துக் கொள்ள ஓட்டுநரின் சம்பளமும் செலவீனத்தில் அடக்கமாகும். கடன் வாங்குவதற்கு முன்பாக புத்திசாலித்தனமாக உங்கள் பட்ஜெட்டை திட்டமிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications