புதிய வாகனம் வாங்க விரும்பும் மக்களுக்கு மத்திய அரசின் பழைய வாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்திற்கு பெரும் உந்துதல் அளிக்கும் வகையில், 21 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கார் வாங்குபவர்களுக்கு சலுகைகளை அள்ளி வீசியுள்ளன.
இந்த சலுகையின் கீழ், பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்த பிறகு புதிய வாகனத்தை வாங்கும்போது, வாகனத்தின் விலையில் அல்லது சாலை வரியில் 25% வரை சலுகை வழங்கப்படும். வணிக வாகனங்களுக்கு 15% சலுகை அளிக்கப்படுகிறது.

பீகார், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சலுகைகளை அறிவித்துள்ளன. பழைய மற்றும் தகுதியற்ற வாகனங்களை ஸ்கிராப் செய்வதை மாநில அரசு மக்களிடம் ஊக்குவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சுமார் 70,000 பழைய வாகனங்கள் தானாக முன்வந்து ஸ்கிராப் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த வாகனங்களில் பல மத்திய அல்லது மாநில அரசு துறைகளுக்கு சொந்தமானவை. டெல்லி மட்டுமே 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களையும் ஆட்டோமேட்டிக் ஆக ஸ்கிராப் செய்ய வேண்டிய விதியுள்ள யூனியன் பிரதேசமாகும்.
பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்த பிறகு வணிக அல்லது போக்குவரத்து வாகனங்களை பதிவு செய்யும்போது 15% சாலை வரி சலுகையை 17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அறிவித்துள்ளன.
பர்சனல் வாகனங்களைப் பொறுத்தவரை, 12 மாநிலங்கள் சாலை வரியில் 25% தள்ளுபடி வழங்குகின்றன. ஹரியானா 10% தள்ளுபடி அல்லது ஸ்கிராப் மதிப்பில் 50%ல் எது குறைவோ அதை வழங்குகிறது. அதே நேரத்தில் உத்தரகண்ட் 25% தள்ளுபடி அல்லது ரூ.50,000ல் எது குறைவோ அதை வழங்குகிறது.
கர்நாடகா புதிய வாகனத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு சாலை வரியில் நிலையான தள்ளுபடியை வழங்குகிறது - எடுத்துக்காட்டாக, ரூ.20 லட்சத்திற்கு மேல் விலையுள்ள வாகனங்களுக்கு ரூ.50,000 தள்ளுபடி வழங்குகிறது. புதுச்சேரி 25% தள்ளுபடி அல்லது ரூ.11,000ல் எது குறைவோ அதை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications