புது கார் வாங்க போறீங்களா..? இதுதான் சரியான சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வரும் இந்த பண்டிகை சீசன் அனைத்து துறை வர்த்தகர்களுக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருவதால், நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களிடம் குவிந்து கிடக்கும் கார் இருப்பை வேகமாக விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக அதிகப்படியான தள்ளுபடியை அறிவித்து வருகிறது.

இந்த பண்டிகை காலமும், தள்ளுபடியும் ஆட்டோமொபைல் துறையின் விற்பனையைப் புத்துயிர் பெறச் செய்யும் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது. எனவே புது கார் வாங்கும் அனைவருக்கும் இந்த பண்டிகை காலம் மிகவும் சிறப்பானதாகவும், லாபகரமானதாகவும் இருக்கும்.

புது கார் வாங்க போறீங்களா..? இதுதான் சரியான சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

இதேபோல் கார் வாங்குவது என்பது மனதிற்குப் பிடித்த விஷயம், குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகப் பார்க்கப்பட்டாலும், இது மிக முக்கியமான நிதியியல் முடிவாகும். எனவே கார் வாங்கும் முன்பு உங்களுடைய நிதி நிலை, கடனுக்கான வட்டி விகிதம், கடன் காலம் முடிந்த பின்பு காரின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு கார் வாங்குங்கள். இதேபோல் இந்த பண்டிகை கால சலுகைகளையும் மிஸ் செய்துவிட வேண்டாம்.

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கார் விற்பனை மோசமாக இருக்கும் காரணத்தால் கார் தயாரிப்பாளர்கள் இந்த பண்டிகை காலத்தில் அதிகப்படியான விற்பனையை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் பெரிய தள்ளுபடிகள் மற்றும் கவர்ச்சியான சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளது.

கொரோனாவுக்குப் பிறகு இந்தியாவில் காருக்கான தேவை அதிகரித்ததால் அதிகளவில் விற்பனையாகி வந்தது. ஆனால் சமீபத்திய காலத்தில் கார் விற்பனை மந்தமடைந்துள்ளது. உதாரணமாகப் பயணிகள் வாகனங்களின் (PVs) விற்பனை செப்டம்பர் மாதம் 309,000 ஆக இருந்து 277,000 ஆக குறைந்துள்ளது.

இந்த வேளையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பொதுவாகவே வருடாந்திர விற்பனையில் சுமார் 30-40% இந்த பண்டிகை சீசனின் போது தான் நடக்கும். இப்படியிருக்கும் போது அதிகப்படியான கார் இருப்பு பிரச்சனை ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தூக்கத்தைத் தொலைக்கும் காரணத்தால் அதிகப்படியான தள்ளுபடி கொடுத்து கார்களை விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.

நவராத்திரி, தசரா மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்கி வருவதால், கார் தயாரிப்பாளர்கள் தள்ளுபடிகள் மற்றும் ப்ரோமோஷன் ஆஃபர்களையும் அள்ளி வீச துவங்கியுள்ளனர்.

டாடா மோட்டார்ஸ் மற்றும் JSW MG மோட்டார் ஆகியவை சில மாடல்களில் விலையை குறைத்து ஆஃபர்களையும் அதிகரித்துள்ளன, மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் விற்பனையைத் துரிதப்படுத்தத் தனது தார் ராக்ஸ் மாடலின் கார் புக்கிங்-ஐ இன்று துவங்கியுள்ளது. இதேபோல் சில முக்கிய கார் மாடலுக்கு அதிகப்படியான ஆஃபர்களையும் வழங்கியுள்ளது.

மருதி சுசூகி ஒரு படிக்கு மேலே சென்று பிராந்திய அடிப்படையிலான ஆஃபர்களை வழங்க துவங்கியுள்ளது. ஓணம் பண்டிக்கைகாக கேரளாவில் முன்பதிவு செய்யும் கார்களுக்கு 10% ஆஃபர் அளிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் ஆஃபர்களை அறிவித்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+