இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான செல்லப்பிராணி நாய்கள் உள்ளன, உலகளவில் 6வது அதிக அளவு செல்லப்பிராணி நாய் வளர்ப்பு கொண்ட நாடாக இந்தியா உள்ளது. நாய் வளர்ப்பவர்கள் பெரும்பாலும் அதை வீட்டில் ஒரு குழந்தையாகவே வளர்க்கும் தன்மை கொண்டு உள்ளனர்.
ஆனால், செல்லப்பிராணி நாய் வளர்ப்பவர்களிடம் ஒரு சிக்கல் உள்ளது. நாய்களைப் பாதிக்கும் பூச்சிக் கடத்திய நோய்கள் (Zoonotic Diseases) குறித்த புரிதல் மற்றும் அறிவு இந்திய செல்லப்பிராணி உரிமையாளர்களிடையே மிகக் குறைவாகவே உள்ளது என்று "Journal of Animal Health and Production" இதழின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த அறியாமையின் முக்கிய காரணங்கள் என்ன என்பது பற்றி ஆய்வு நடத்தியதில் 2 முக்கியமான விஷயம் பிரதானமாக உள்ளது. மருத்துவச் சிகிச்சைகளின் அதிக செலவு (43.33% செல்லப்பிராணி உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்) மற்றும் நாய்களுக்கான போதுமான காப்பீடு வசதிகள் இல்லாதது (36.25% செல்லப்பிராணி உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்) ஆகியவை தான்.
இதை இரண்டும் சரி செய்துவிட்டால் மனிதர்கள் எப்படி தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காக ஆயுள் காப்பீடும், மருத்துவ காப்பீடும் எடுக்கிறார்களோ அதேபோல் செல்லப்பிராணிகளுக்கும் எடுக்க முன்வருவார்கள். இதற்கான தீர்வுகளும் சந்தையில் உள்ளன!
செல்லப்பிராணி காப்பீடு மூலம், செல்லப்பிராணிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு விரிவான பாதுகாப்பைப் பெற முடியும். உதாரணமாக, இரண்டு வயது லெப்ராடார் நாய்க்கு ரூ.20,000 காப்பீடு தொகை கொண்ட செல்லப்பிராணி காப்பீடு பாலிசி, பாலிபஜாரில் (Policybazaar) ரூ.800 முதல் ரூ.1,300 வரை கிடைக்கிறது. இந்த காப்பீடு மூலம் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை (OPD), அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவமனை செலவுகளுக்குக் காப்பீடு வசதி கிடைக்கும்.
மேலும், இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு போன்ற எட்டு கடுமையான நோய்கள் கண்டறியப்பட்டால், காப்பீடு தொகையை ஒரே தவணையில் வழங்கும் "கடுமையான நோய் பாதுகாப்பு" (Critical Illness Cover) மற்றொரு சிறந்த தேர்வாகச் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் மத்தியில் உள்ளது.
இன்னும் சில காப்பீட்டு நிறுவனங்கள், செல்லப்பிராணிகளின் செயல்பாடுகள் காரணமாக ஏற்படும் சேதங்களுக்கான, நிதி இழப்புகளில் இருந்து செல்லப்பிராணி உரிமையாளர்களைக் காப்பாற்றும் "மூன்றாம் தரப்பு பொறுப்பு" (Third-party Liability) காப்பீட்டையும் வழங்குகின்றன.
செல்லப்பிராணி காப்பீட்டுக்கான காப்பீடு தொகை ரூ.40,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை இருக்கும். இது திட்ட வகை, நாய் இனம், வயது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீடு தொகை போன்ற காரணிகளைப் பொறுத்து ப்ரீமியம் மாறுபடும். மேலும் சில காப்பீட்டு நிறுவனங்கள் சில நாய் இனங்களுக்குக் காப்பீடு வழங்காமல் இருக்கலாம், இதேபோல் ஒவ்வொரு திட்டத்திற்கும் நோய் பாதுகாப்பு மாறுபட வாய்ப்புகள் அதிகம் என்பதால் காப்பீட்டுத் திட்டத்தை முழுமையாக அறிந்த பின்பு தேர்வுசெய்வது உத்தமம்.


Click it and Unblock the Notifications