2023-24 நிதி ஆண்டுக்கான (2024-25 மதிப்பீட்டு ஆண்டு) வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யத் தயாராகி வருகிறீர்கள் என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது படிவம் 26AS (வரி அறிக்கை) மற்றும் ஆண்டு தகவல் அறிக்கை (AIS) ஆகியவற்றைப் பெறுவதுதான்.
இந்த 2 அறிக்கையும் ஏன் முக்கியம் என்றால், இதில் வருடம் முழுவதும் செய்யப்பட்ட வரி பிடித்தம், செலுத்திய வரி மற்றும் பிற நிதி பரிவர்த்தனைகள் குறித்த விரிவான தகவல்களை வழங்குகின்றன. இதன் அடிப்படையாகக் கொண்டு தான் வருமான வரி ஈபைலிங் தளத்தில் முன்கூட்டியே தகவல்கள் நிரப்பப்படும்.

இதேபோல் ஆண்டு தகவல் அறிக்கையை (AIS) எவ்வாறு பெறுவது என்பது பலருக்கும் தெரியாது. வருமான வரித்துறை (I-T) இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாகவே உங்கள் ஆண்டு தகவல் அறிக்கையை அணுகலாம்.
- முதலில் www.incometax.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள 'AIS' டேப் மீது கிளிக் செய்து தொடரவும்.
- இங்கு இரண்டு டேப்கள் இருக்கும். 'வழிமுறைகள்' மற்றும் 'AIS'. இதில் வழிமுறைகளின் பட்டியலைக் கவனமாகப் படித்து பின்னர் 'AIS' ஐத் தேர்ந்தெடுக்கவும்.
- இதை தொடர்ந்து AIS அறிக்கையைப் பதிவிறக்கம் செய்யலாம்
- டவுன்லோடு செய்யப்பட்ட அறிக்கைக்கு பாஸ்வோர்டு பாதுகாப்பு செய்யப்பட்டு இருக்கும். இதற்கான பாஸ்வோர்டு உங்கள் பான் எண் மற்றும் பிறந்த தேதி ஆகும்.
AIS அறிக்கையை ஆய்வு செய்வது அவசியம்..!
AIS அறிக்கையில் இருக்கும் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வரி பிடித்தம் (TDS) பதிவுகளை ஆய்வு செய்வது அவசியம். கடந்த நிதியாண்டில் நீங்கள் பெற்ற வருமானம் ஏதேனும் தவறவிடப்பட்டு உள்ளதா என்பதை செக் செய்வது அவசியம்.
AIS அறிக்கையும், படிவம் 26ASம் வரி செலுத்துபவரின் பரிவர்த்தனைகளின் முழுமையான வரலாற்றைக் கொண்டுள்ளதால், எந்த வருமானமும் மிஸ் ஆகாது.
உதாரணமாக, பங்குகளின் விற்பனை அல்லது மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களின் விற்பனை பற்றிய தகவலை நீங்கள் அறிவிக்கத் தவறிவிட்டால், வருமான வரித்துறை உங்கள் ஈபைலிங் அறிக்கையைத் தாக்கல் செய்யும் போது வரி தொடர்பான தகவல் வெளிப்படுத்தப்படாததற்கான அறிவிப்பைப் பெறுவீர்கள்.
இதேபோல் வரி ரீபண்ட் பெறுதல், சேமிப்பு கணக்கு வட்டி அல்லது ஈட்டப்பட்ட டிவிடெண்ட், வாடகை தொகை பெறுதல், பத்திரங்கள், அசையாச் சொத்துகள், வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகள் போன்றவற்றின் விவரங்கள் இதில் காண்பிக்கப்படும்.
எனவே, உங்கள் வருமான வரி ஈபைலிங்-ல் இந்த விவரங்கள் அனைத்தையும் பிரதிபலிக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் படிவம் 16 இல் ஏதேனும் தவறான தரவைக் கண்டறிந்தால், வருமான வரி தளத்திலேயே உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications