ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப் போகிறீர்களா? அப்டின்னா இந்த 4 விஷயங்களை தெரிஞ்சிகோங்க..!

இந்தியாவில் இப்போது ரியல் எஸ்டேட் துறையில் ஏகப்பட்ட பேர் முதலீடு செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் பிசினஸ் இப்போது மிகவும் லாபகரமாகச் செயல்படுகிறது.

நிறைய ஊழியர்களும், தொழிலாளிகளும் தங்களது வாழ்நாள் முதலீடாக ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபடுகின்றனர்.

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப் போகிறீர்களா? அப்டின்னா இந்த 4 விஷயங்களை தெரிஞ்சிகோங்க..!

சரியாகத் திட்டமிட்டு, சரியான நிலத்தில் முதலீடு செய்தால் வரும்காலத்தில் நல்ல வருமானம் பெறலாம். அதேநேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யும் முதன்முறை வாடிக்கையாளர்கள் சில அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அவற்றைப் பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

அடிப்படை வசதிகள்: சொந்தமாக வீடு வாங்குகிறீர்கள் என்றால் அந்த வீடு அமையும் இடம் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதா என்று பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும். பொது போக்குவரத்து, தண்ணீர் வசதி, ஷாப்பிங் செய்யும் கடைகள், பிள்ளைகளுக்கான விளையாட்டு மைதானங்கள், மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்கள் அருகிலேயே இருக்க வேண்டும்.

அத்துடன் அருகிலேயே புதிய நகரங்கள் அமையும் வாய்ப்புகள் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். அலுவலகத்துக்கு அருகிலேயே வீடு இருக்கும் வகையில் பார்க்க வேண்டும். சொத்து வாங்கும் முன்பாக அந்த சொத்தில் ஏதும் வில்லங்கம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பிரச்னை இல்லை என்ற பின்னர்தான் சொத்துகளை பதிவு செய்ய வேண்டும்.

மறு விற்பனை மதிப்பு: ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு முன்பாக அதன் உண்மையான மதிப்பை அறிந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் அந்த சொத்து மதிப்பு உயரும் வாய்ப்புள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தங்களது பட்ஜெட்டுக்குள் இருக்கும்படி நிலத்தை அல்லது வீட்டை வாங்க வேண்டும்.

கொரானா பெருந்தொற்றுநோய்க்குப் பிறகு, எல்லாருமே தங்களுக்கு என்று சொந்தமாக ஒரு வீட்டை வைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர். இப்போது புதிதாக உருவாகி விட்ட 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறைகள், நகரத்திலிருந்து தொலைதூரத்தில் இருந்தாலும், மக்கள் தங்களுக்கு என ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்ற உத்வேகம் வந்துவிட்டது.

இதனால் கிராமப்புறங்களிலும் வீட்டுத் திட்டங்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. RERA சட்டம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, செலவுக் குறைப்பு, முதலீட்டில் அதிக வருமானம் மற்றும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இதனால் கட்டுமானத்தில் உள்ள ரியல் எஸ்டேட் திட்டங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தூண்டப்படுகின்றனர்.

முடிக்கப்பட்ட குடியிருப்புத் திட்டங்கள் உடனடியாக ஆக்கிரமிப்பிக்கப்படுகிறது.
வீடு வாங்குவதால் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வருமான வரிச் சலுகைகளைப் பெறுவதற்கான வழிவகையும் ஏற்பட்டுள்ளது.

Story written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+