உலகளவில் தற்போது செயற்கை நுண்ணறிவான Artificial intelligence துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதற்கேற்ற வகையில் தற்போது செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த படிப்புகள் வந்துவிட்டன. உங்களுக்கு செயற்கை நுண்ணறிவு துறையில் வேலைவாய்ப்பு வேண்டுமென்றால் இந்த திறன்களில் ஒன்று இருந்தால் போது.
Machine Learning (ML): செயற்கை நுண்ணறிவின் அடிப்படையே மெஷின் லேர்னிங் தான். அதாவது தரவுகளை ஏற்று கொண்டு செயல்படுவதுதான் முக்கியம். மோசடிகளை கண்டறியது, புகைப்படத்தை அறிந்து கொள்வது, பரிந்துரைகளை வழங்குவது என பலவற்றுக்கும் இது பயன்படும்.

Python: செயற்கை நுண்ணறிவு துறையில் வேலை தேடுபவர்களுக்கு நிச்சயம் பைத்தான் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இது ஒரு புரோகிராமிங் மொழி ஆகும். டெவலப்பர்களால் பரவலாக பயன்படுத்துவது, நிரலாக்கங்களின் களஞ்சியமாக இருப்பது உள்ளிட்ட காரணங்களால் இது புகழ்பெற்ற புரோகிராமிங் மொழியாக உள்ளது.
Deep Learning: மெஷின் லேர்னிங்கின் துணை பிரிவு இது. சிக்கலான தரவுகளை புரிந்து கொண்டு செயலாக்க ஒரு நியூரல் நெட்வொர்க்காக இது செயல்படுகிறது. மொழிமாற்றங்கள், தானியங்கி கார்கள் உள்ளிட்டவற்றுக்கு இது மிக முக்கியம்.
Natural Language Processing : கணினிகள் மனிதர்களின் மொழிகளை புரிந்து கொண்டு, அதை போலவே உருவாக்க இந்த தொழில்நுட்பம் மிக அவசியம். சாட் பாட்கள், மெஷின் டிரான்சிலேசன், சென்டிமென்ட் அனலிசஸ் ஆகியவற்றில் இது பயன்படுகிறது.
Computer Vision : படங்கள் மற்றும் வீடியோக்களில் இருந்து தரவுகளை பெறுவதற்கு உதவும் நுட்பம் இது. முக அடையாளம் காணுதல், தானியங்கி ரோபோக்கள் உள்ளிட்டவற்றில் இது அவசியம்.
Big Data Technologies: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முக்கியமாக பெரிய டேட்டா செட்களை கையாள்வது அவசியம். அதற்கு இந்த தொழில்நுட்பம் தான் அடிப்படை.
Cloud Computing: மிகப்பெரிய ஏஐ புராஜெட்களுக்கு தரவுகளை சேமிக்க மிக முக்கியமான தொழில்நுட்பம் இது. தற்போது AWS, Azure, மற்றும் Google Cloud ஆகியவை புகழ்பெற்ற கிளவுட் கம்பியூட்டிங் சேவைகள் ஆகும்.
Data Science: தரவுகளை கையாள்வது, பகுப்பாய்வு செய்வது, ஒரு நிரலுக்குள் பொருத்துவது என தரவு சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளுக்கும் இது முக்கியம். ஏஐ மாடல்களுக்கு தேவையான தரவுகளை தயாரிப்பது மற்றும் பகுப்பாய்வு செய்து வழங்குவதில் டேட்டே சைண்டிஸ்ட்களின் பங்கு தான் முக்கியம்.
Communication Skills: ஏஐ தொழில்நுட்பத்தின் கருத்தாக்கம், தொழில்நுட்ப ரீதியாகவும் சரி, தொழில்நுட்பம் இல்லாத வகையிலும் சரி சரியாக எடுத்துரைக்கும் திறமை முக்கியம். ஒரு குறிப்பிட்ட புராஜெக்ட் குறித்து விவரிக்கவும் பயன்பாட்டுக்கும் கொண்டு வரவும் இந்த திறமை மிக மிக முக்கியமாகும்.
Story written by: Devika
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications