கொங்கு மண்டல மக்களுக்கு குட்நியூஸ்..! ரியல் எஸ்டேட்-ல் முதலீடு செய்ய பெஸ்ட் இடம் இதுதான்..!!

இந்தியாவில் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வீடு வாங்குவது என்பது சாதாரண மக்களுக்கு கனவாக மாறிவிடும் அளவிற்கு தற்போது ரியல் எஸ்டேட் விலை உயர்ந்துள்ளது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டினை வாங்க வேண்டும் என்றால் கூட குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

இதன் காரணமாக மக்கள் வளர்ந்து வரும் நகரங்களை நாடிச் செல்ல தொடங்கி விட்டனர். அந்த வகையில் சொத்துக்கள் மற்றும் அவற்றின் மதிப்புகளை ஆய்வு செய்யக்கூடிய Colliers India என்ற நிறுவனம் இந்தியாவில் இனி எந்தெந்த நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியில் இருக்கும் என கணித்து 17 நகரங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

கொங்கு மண்டல மக்களுக்கு குட்நியூஸ்..! ரியல் எஸ்டேட்-ல் முதலீடு செய்ய பெஸ்ட் இடம் இதுதான்..!!

வட இந்தியாவில் வாரணாசி, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், அயோத்தி, அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ளது. அடுத்ததாக கிழக்கு இந்தியாவைப் பொறுத்தவரை பாட்னா மற்றும் பூரி ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மேற்கு இந்தியாவை பொறுத்தவரை சூரத், சீரடி, நாக்பூர், துவாரகா ஆகிய நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் கோயம்புத்தூர், கொச்சின் , திருப்பதி விசாகப்பட்டினம் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் ரியல் எஸ்டேட் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்ளலாம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நகரங்களில் குடியிருப்புகள் மட்டுமின்றி வணிக ரீதியான கட்டடங்கள், அலுவலக கட்டடங்கள், மற்றும் சுற்றுலாத் துறைக்கு தேவையான தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை கணிசமான அளவு அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

எனவே இந்த நகரங்களில் ரியல் எஸ்டேட் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வது சிறந்த முடிவாக இருக்கும் என பரிந்துரைத்துள்ளது. Colliers India நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாதல் யக்னிக், தங்களது நிறுவனம் நடத்திய ஆய்வு அடிப்படையில் நான்கு முக்கிய காரணிகள் இங்கே வளர்ச்சியை ஊக்குவிப்பவையாக இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

வேலை சூழல்களில் ஏற்பட்டு வரக்கூடிய மாற்றம், உள்கட்டமைப்பு வளர்ச்சி, சுற்றுலாத்துறை மற்றும் டிஜிட்டல் மயமாக்கம் இந்த நான்கு காரணிகள் காரணமாக இந்த 17 நகரங்களும் நல்ல வளர்ச்சியை பெற இருப்பதாக கூறுகிறார்.

கோயம்புத்தூர், இந்தூர் ,கொச்சி ஆகிய நகரங்கள் வலுவான அலுவலக சந்தையாக இருக்கின்றன என்றும் ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, நாக்பூர் பாட்னா மற்றும் சூரத் ஆகியவை டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நகரங்களாக இருக்கும் என்றும் கூறுகிறார். அமிர்தசரஸ், சீரடி, துவாரகா திருப்பதி மற்றும் வாரணாசி ஆகியவை பக்தி சுற்றுலாவில் வளர்ச்சி அடையும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் ரியல் எஸ்டேட் துறை என்பது 1 ட்ரில்லியன் டாலர்கள் என்ற மதிப்பை எட்டும் என தெரிவிக்கப்படுகிறது. 2050 ஆம் ஆண்டு இந்தியாவில் 10 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகையை கொண்டு 100 நகரங்கள் இருக்கும் என்றும் எட்டு மேகா நகரங்கள் இருக்கும் என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+