நிலத்தின் மீது நீங்கள் செய்யும் முதலீடு ஒருபோதும் கைவிடாது என்பார்கள். ஆனால் 2026-ல் எங்கு முதலீடு செய்தால் உங்கள் பணம் ஜெட் வேகத்தில் வளரும், இன்று ஒரு சதுர அடிக்கு நீங்கள் கொடுக்கும் விலை, இன்னும் ஐந்தே ஆண்டுகளில் பல மடங்கு லாபத்தை தரப்போகிறது. புதிய மெட்ரோ பாதைகள், பிரம்மாண்டமான விமான நிலையங்கள் மற்றும் பெருகி வரும் ஐடி நிறுவனங்கள், இவை தான் ஒரு இடத்தின் மதிப்பை தீர்மானிக்கின்றன.
சாதாரண முதலீட்டாளராக இல்லாமல், ஒரு ரியல் எஸ்டேட் ஜாம்பவானாக மாற, நீங்கள் குறி வைக்க வேண்டிய அந்த 5 மேஜிக் நகரங்கள் எவையாக இருக்க வேண்டும்? உங்கள் எதிர்கால நிம்மதியை உறுதி செய்யப் போகும் அந்த ஹாட்ஸ்பாட்கள் எவை? வாருங்கள் பார்க்கலாம்.

பெரிய அளவில் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படும் 5 நகரங்களில் சூரத், லக்னோ, கோயம்புத்தூர், புபனேஷ்வர், நாக்பூர் உள்ளிட்ட நகரங்கள் அடங்கும். இதற்கு மேற்கண்ட நகரங்களில் இருக்கும் தொழில்துறை வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, மக்கள் குடியேற்றம் மற்றும் அதிகரித்து வரும் சொந்த மற்றும் வாடகை வீடுகளுக்கான தேவை ஆகியவை காரணமாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற நகரங்களில் பெரும் நகரங்களுடன் ஒப்பிடும்போது விலைவாசி குறைவு. ஆக இங்கு முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானம் பெறும் வாய்ப்புகள் அதிகம்.
சூரத் (குஜராத்): வைர மற்றும் ஜவுளித் தொழிலில் உலக அளவில் சூரத் முன்னணியில் உள்ளது. சூரத் மெட்ரோ ரயில் மற்றும் தாபி நதி நீர் மேம்பாட்டுத் திட்டம் (Tapi Riverfront) போன்றவை நகரின் முகப்பையே மாற்றி வருகின்றன. சூரத் சிறந்த தொழில் மையமாக மாறிவரும் சூழலில், தொழில்துறை விரிவாக்கத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, வாடகை வீடுகளுக்கான தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. இது அதன் ரியல் எஸ்டேட் சந்தையும் இனி வரும் ஆண்டுகளில் ஊக்குவிக்கலாம்.
லக்னோ (உத்தர பிரதேசம்): லக்னோவை பொறுத்த வரையில் வெறும் நிர்வாக தலைநகராக மட்டுமல்லாமல், தற்போது ஒரு IT மற்றும் ஸ்மார்ட் சிட்டி மையமாகவும் மாறி வருகிறது. இதை மேற்கொண்டு ஊக்குவிக்கும் விதமாக மெட்ரோ விரிவாக்கம், விமான நிலையை விரிவாக்கம், ரயில் தடங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட வளர்ச்சிக்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அங்கு ரியல் எஸ்டேட் வளர்ச்சியும் மேம்பட்டு வருகிறது.
பான் கார்டு எண்ணில் உங்க ஜாதகமே இருக்கு.. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ரகசியம் இருக்கு..!
கோயம்புத்தூர் (தமிழ்நாடு): தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில், அங்குள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs) மற்றும் தொழிற்சாலைகளின் பலமான வருகையால் தொடர்ந்து நிலையான வளர்ச்சியை கண்டு வருகிறது. அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகள் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் ஆகியவை வீடுகளுக்கான தேவையை நிலையாக வைத்துள்ளன. மேலும் முக்கிய கல்வி மற்றும் சுகாதார மையமாக இருக்கும் இந்த நகரம், மாணவர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களின் வருகையை அதிகரித்துள்ளது. இது வாடகை வீடுகளுக்கான தேவையை உயர்த்தி, முதலீட்டாளர்களுக்கு நிலையான வாடகை வருமானத்துடன் நீண்ட கால லாபத்தையும் ஈட்டித் தரும் வாய்ப்புகளை வழங்குகிறது.
புவனேஸ்வர் (ஒடிசா): IT பூங்காக்கள் மற்றும் தொழில்துறை வழித்தடங்களின் (Industrial Corridors) மேம்பாடு, வரும் காலங்களில் ரியல் எஸ்டேட் விலையேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முக்கிய சுற்றுலா மற்றும் கல்வி மையமாக இந்த நகரம் பெற்றுள்ள சிறப்பம்சமும், மக்கள் தொகை பெருக்கத்திற்கும் மற்றும் வீடுகளுக்கான தேவை அதிகரிப்பதற்கும் முக்கியப் பங்காற்றியுள்ளது. இவை அனைத்தும் புவனேஸ்வரை நீண்ட கால சொத்து முதலீட்டிற்கு ஒரு சிறந்த இடமாக மாறியுள்ளது.
நாக்பூர் (மகாராஷ்டிரா): இந்தியாவின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால், இது ஒரு மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து மற்றும் கிடங்கு மையமாக மாறியுள்ளது. இந்த மேம்பாடுகள் வரும் ஆண்டுகளில் நிலம் மற்றும் சொத்துக்களின் விலையை மேல்நோக்கி உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ விரிவாக்கம், விமான நிலைய மேம்பாடு மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் உள்ளிட்ட தற்போது நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு பணிகள், ரியல் எஸ்டேட் சந்தையை பலப்படுத்துவதோடு, அந்த நகரத்தின் முதலீட்டு திறனையும் மேம்படுத்தி வருகின்றன.


Click it and Unblock the Notifications