உலகில் நல்ல டிமாண்ட் இருக்கின்ற ஒரு துறை மென்பொருள். குறிப்பாக டிஜிட்டர் மயமாக்கம் காரணமாக இவர்களின் தேவை அதிகரித்துள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் இந்தத் துறையில் வல்லவர்களாக இருக்கின்றனர்.
இதன் காரணமாகவே பல்வேறு வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்த மென்பொறியாளர்களை பணியில் அமர்த்துவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. அந்த வகையில் உலகின் எந்தெந்த நாடுகளில் மென்பொறியாளர்களுக்கான தேவை என்பது அதிகமாக இருக்கிறது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்கா: மென் பொருள் பொறியாளர்களுக்கான தேவை அதிகமாக காணப்படும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. உலகின் பிரதான தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமையகங்கள் இங்குதான் செயல்படுகின்றன.
இங்கே திறமையான மென்பொருள் பொறியாளர்களுக்கு எப்பொழுதுமே தேவை அதிகமாகவே இருக்கிறது. அது மட்டுமின்றி மென்பொருள் பொறியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அதிகம்.
கனடா: அமெரிக்காவைப் போலவே கனடாவிலும் மென்பொருள் பொறியாளர்களுக்கான தேவை எப்பொழுதுமே நீடிக்கிறது. இங்கே பெரிய பெரிய தொழில் நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருவது இதற்கு முக்கிய காரணம்.
மேலும் வெளிநாட்டை சேர்ந்த திறமை வாய்ந்த பணியாளர்கள் எளிதாக விசா பெற்றுக் கொண்டு பணி செய்ய முடியும் என்பதற்கான நாடுகளின் பட்டியலில் கனடா முன்னிலையில் இருக்கிறது.
ஆஸ்திரேலியா: தற்போது மிக வலுவான தொழில்நுட்ப துறையை கட்டமைத்து வருகிறது. இதற்காக அங்கே மென்பொருள் பொறியாளர்களின் தேவை குறிப்பாக வெப் மற்றும் மொபைல் டெவலப்மென்ட் துறைகளை சார்ந்தவர்களுக்கான தேவை என்பது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
ஜெர்மனி: ஐரோப்பிய நாடுகளில் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த ஒரு நாடு ஜெர்மனி என கூறலாம். இங்கே ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் மற்றும் இன்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் சார்ந்த துறைகளில் செயல்படக்கூடிய மென்பொருள் பொறியாளர்களுக்கான தேவை என்பது அதிகமாகவே இருக்கிறது.
பிரிட்டன்: பிரிட்டனில் தற்போது தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு துறையாக இருக்கிறது. பிரிட்டன் அரசாங்கமும் தொழில்நுட்பத் துறை மீது கவனம் செலுத்தி வருகிறது எனவே இங்கு மென்பொருள் துறையில் பல்வேறு திறமை வாய்ந்த பணியாளர்களுக்கான தேவை இருக்கிறது.
அதேபோல வேலை மற்றும் வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட விரும்பும் நபர்களுக்கான சிறந்த நாடாக பிரிட்டனை தேர்வு செய்யலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சீனா: உலகில் உள்ள பெரும்பாலான மென்பொருள் பொறியாளர்கள் சீனாவில் தான் உள்ளனர். இருப்பினும் சீனாவில் இன்னும் திறமையான மென்பொருள் பொறியாளர்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது.
ஏனெனில் சீன அரசாங்கம் தொழில்நுட்பத் துறையில் பல மில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது. எனவே இங்கே மென்பொருள் பொறியாளர்களுக்கான புதிய வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது.
அயர்லாந்து: ஐரோப்பிய நாடுகளில் முக்கியமான தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த ஒரு நாடு. அயர்லாந்து அரசாங்கம் தொழில்நுட்ப நிறுவனங்கள் அங்கே தொழில்களை தொடங்குவதை எளிமைப்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் அயர்லாந்தில் தொழில் செய்வதை விரும்புகின்றன எனவே அங்கு மென்பொருள் பொறியாளர்களுக்கான தேவை இனிவரும் காலங்களில் அதிகரிக்கும்.
சுவிட்சர்லாந்து: இங்கே திறமையான பணியாளர்களுக்கு வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன குறிப்பாக மென்பொருள் பொறியாளர்களுக்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கக்கூடிய நாடு ஸ்விட்சர்லாந்து. இங்கே ஊதியம் அதிகம் அதே வேளையில் காஸ்ட் ஆஃப் லிவிங்கும் அதிகம்.
சிங்கப்பூர்: சிறிய நாடாக இருந்தாலும் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய நாடு சிங்கப்பூர். இங்கே திறமையான பணியாளர்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு தருகிறது. குறிப்பாக மென்பொருள் பொறியாளர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இங்கே கிடைக்கின்றன.
இஸ்ரேல்: தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களுக்கு பெயர் போன ஒரு நாடு. இங்கே பல்வேறு திறமைகள் கொண்ட மென்பொருள் பொறியாளர்களுக்கான தேவை எப்பொழுதுமே இருந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் ஒரு மென்பொறியாளராக இருந்தால் உங்கள் தொழிலிலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் முன்னேறுவதற்கு சிறந்த நாடாக இஸ்ரேல் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
Story written by : Devika
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications