கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொதுவான ஒன்றாகிவிட்டது. என்னதான் வட்டி விகிதங்கள் அதிகமாக இருந்தாலும் கிரெடிட் கார்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதற்கு ஏற்ப கிரெடிட் கார்டுகளும் சில நன்மைகளை வழங்குகிறது. அவசரமாக பண தேவைகள் ஏற்பட்டாலோ அல்லது மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலோ மக்கள் கிரெடிட் கார்டை வைத்து பணம் செலுத்துகின்றனர்.
வட்டி இல்லா காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்தி விட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது. அதுவே உங்களால் கிரெடிட் கார்டு கடனை சரிவர திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் சிக்கலாகிவிடும். ஏனெனில் பிற கடன்களை விட கிரெடிட் கார்டு கடன்களுக்கு 42 சதவீதம் வரை வட்டி விகிதம் இருக்கலாம். எனவே கிரெடிட் கார்ட் கடன்களை திருப்பி செலுத்த முடியாத பட்சத்தில் தனிநபர்கள் வேறு எந்தெந்த ஆப்ஷனை பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

கிரெடிட் கார்டு கடனை உரிய தேதிக்குள் செலுத்த முடியாவிட்டால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் எதிர்காலத்தில் கடன் பெற முடியாமல் போகலாம். கடனை திருப்பி செலுத்த முடியாதவர்கள் அதற்கு மாற்றாக பர்சனல் லோன்களை பெறலாம்.
குறைந்த வட்டி விகிதம்: கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகளுக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதம் அதிகம் என்பதை முன்பே பார்த்தோம். பெரும்பாலான கிரெடிட் கார்டுகளுக்கு மாதத்திற்கு 3.75 சதவீதம் முதல் வருடத்திற்கு 45 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே முழு நிலுவைத் தொகையையும் விரைவாக திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் நீங்கள் நிதி சிக்கலில் சிக்கும் அபாயம் உள்ளது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் பர்சனல் லோன்களைப் பெற்று கிரெடிட் கார்டு கடன்களை அடைக்கலாம். பர்சனல் லோன்களுக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதம் அந்தந்த வங்கியை பொருத்து மாறுபடும். மேலும் இந்த கடன்களுக்கு ஆண்டுக்கு 10% முதல் 20% வரை வட்டி விகிதம் இருக்கலாம். கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் அதை தனி நபர் கடனாக மாற்றி அடைக்கலாம்.
கிரெடிட் கார்டு கடன்களை ஒரே பர்சனல் லோனாக மாற்றலாம்: ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்துக்கொண்டு பணத்தை திருப்பி செலுத்த முடியாத பட்சத்தில் அவற்றையெல்லாம் ஒரே ஒரு தனி நபர் கடனாக மாற்றிக் கொள்ளலாம். இதனால் அதிக வட்டியை செலுத்துவதை தவிர்க்கலாம்.
EMI-ஐத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன்: நிலுவையில் உள்ள கிரெடிட் கார்டை தனிநபர் கடனாக மாற்றும் போது, உங்கள் மாதாந்திர திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்து EMI தொகையைத் தேர்வு செய்யலாம். அதன்படி, நீங்கள் தனிநபர் கடன் காலத்தைத் தேர்ந்தெடுக்கலாம். வங்கிகள் பொதுவாக 12 முதல் 60 மாதங்கள் வரையிலான கால அவகாசத்துடன் தனிநபர் கடன்களை வழங்குகின்றன.
கடன் பயன்பாட்டு விகிதம் குறைவு: நீங்கள் ஒரு தனிநபர் கடனை எடுத்து, அந்தத் தொகையை கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைப் பயன்படுத்தி திருப்பிச் செலுத்தும்போது, அது கிரெடிட் கார்டின் கடன் பயன்பாட்டு விகிதத்தைக் குறைக்கிறது. அதோடு நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் கடன் பயன்பாட்டு விகிதத்தைக் குறைத்தல் ஆகியவை உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதற்கு பங்களிக்கின்றன.


Click it and Unblock the Notifications