அர்ஜென்டினா ஞாயிற்றுக்கிழமை வலதுசாரியான லிபர்டி கட்சியை சேர்ந்த ஜேவியர் மிலி-யை அந்நாட்டு மக்கள் புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். பொருளாதாரம், வர்த்தகம், அமெரிக்காவுக்கு நெருக்கம் என தீவிரமான பார்வைகளைக் கொண்டவர் ஜேவியர் மிலி.
அர்ஜென்டினா அரசின் அதிகாரப்பூர்வ தகவல் படி ஜேவியர் மிலி 56 சதவீத வாக்குகளைப் பெற்றார், அவரது சக போட்டியாளரும், பெரோனிஸ்ட் கட்சியின் பொருளாதார அமைச்சர் செர்ஜியோ மாஸா 44 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஜேவியர் மிலி வருகை அந்நாட்டில் பல மாற்றங்களை கொண்டு வரப்பட உள்ளது. அர்ஜென்டினா-வின் ஆட்சி மாற்றம் முக்கியமானதாக பார்க்கப்படுவது அந்நாட்டில் இருக்கும் லித்தியம் உலோகம் தான். இன்று சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு உலோகம் லித்தியம்.
ஜேவியர் மிலி மூலம் அர்ஜென்டினாவின் அரசியல் மற்றும் பொருளாதாரம் பெரிய அளவில் மாற்ற உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அவர் கூறிய 2 முக்கியமான விஷயங்கள் தான் 1. டாலர் தேசம், 2. மத்திய வங்கி நீக்கம்..
இவ்விரண்டும் அந்நாட்டின் தானியங்கள் மற்றும் லித்தியம் வர்த்தகத்தின் பாதையை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்றார் போல் ஜேவியர் மிலி சீனா மற்றும் பிரேசிலை விமர்சித்து "கம்யூனிஸ்டுகளுடன் டீல் செய்ய மாட்டேன்" என்று பேசினார்.
ஜேவியர் மிலி அர்ஜென்டினா நாட்டை டாலர் தேசமாக மாற்ற உள்ளதாக அறிவித்தார், அந்நாட்டின் பொருளாதார போக்கை மாற்ற அர்ஜென்டினா பீசோ நாணயத்தை பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு அமெரிக்க டாலரை அதிகாரப்பூர்வ நாணயமாக மாற்றுவதாக கூறி தனது பிரச்சாரத்தின் போது வாக்குறுதி கொடுத்தார். இதன் மூலம் அர்ஜென்டினா தனது தானியங்கள் மற்றும் லித்தியம் உலோக வர்த்தகத்திற்கு டாலரில் பணத்தை பெறும்.
இதேபோல் அர்ஜென்டினா நாட்டை டாலர் தேசமாக மாற்ற அந்நாட்டின் மத்திய வங்கியை மூடவும் வாக்குறுதி கொடுத்துள்ளார். டாலர் தேசமாக மாறுவது இது முதல் நாடு இல்லை, இதற்கு முன்பு இக்வேடார், எல் சால்வடோர் போன்ற நாடுகள் மாறியுள்ளது ஆனால் அர்ஜென்டினா போன்ற அளவிலான நாடுகள் இதுவரை மாறியது இல்லை.
அர்ஜென்டினா நாட்டின பணவீக்கம் 142 சதவீதமாக இருக்கும் வேளையில் அர்ஜென்டினா பீசோ நாணயத்தை பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு அமெரிக்க டாலரை அதிகாரப்பூர்வ நாணயமாக மாற்றுவது மூலம் அந்நாட்டின் பொருளாதார நிலையை மாற்றி விட முடியும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications