உலகம் முழுவதும் டாலர் ஆதிக்கத்தால் பல நாடுகள் பலவற்றை இழந்து வருகிறது, குறிப்பாக அதிகப்படியான இறக்குமதிகளை நம்பியிருக்கும் நாடுகள் அனைத்தும் டாலர் ஆதிக்கத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல வருடங்களாக டாலர் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் சர்வதேச அளவில் பயன்படுத்தும் மாற்றும் நாணயம் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சு இருந்தாலும், இது நடைமுறையில் சாத்தியம் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் வெடித்தது மூலம் ஜி7 நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்த காரணத்தால், இந்த தடையில் இருந்து தப்பிக்கவும், மாற்று விழியை தேடவும் ரஷ்யா எடுத்த முடிவு உள்நாட்டு நாணய பரிமாற்றம். இது பெரிய அளவில் வரவேற்பு பெற்ற நிலையில் உலக நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் பொருட்களுக்கு உள்நாட்டு நாணயத்தையோ அல்லது தங்களுக்கு விருப்பமான நாணயத்தை தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்கியது.

சமீபத்தில் பங்களாதேஷ் சீன யுவான் நாணயத்தை ரஷ்யா இறக்குமதிக்கும் சேவைகளுக்கும் பேமெண்ட் செலுத்த தேர்வு செய்தது. ஆனால் தற்போது நிலைமை அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது, இதனால் அடுத்த சில காலாண்டுகளுக்குள் டாலர் ஆதிக்கம் பெரிய அளவில் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஜென்டினா பொருளாதாரம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வரும் வேளையில் தொடர் சரிவை கட்டுப்படுத்தும் முயற்சியாக, இனி சீன இறக்குமதிக்கு டாலரை பயன்படுத்தாமல் யுவான் நாணயத்தை பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த முடிவின் மூலம் அர்ஜென்டினா-வின் டாலர் இருப்பு சரிவதை அதிகளவில் தடுப்பது மட்டும் அல்லாமல் நாணய மதிப்பின் சரிவை கட்டுப்படுத்தி விலைவாசியை குறைக்க முடியும் என நம்புகிறது. இதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டினா சீனா உடன் 5 பில்லியன் டாலர் அளவிலான currency swap-ஐ விரிவாக்கம் செய்தது.
அர்ஜென்டினா-வில் விவசாய உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் இதன் ஏற்றுமதி வர்த்தகம் அதிகளவில் பாதித்து வர்த்தகம் வருவாயும் பாதித்த காரணத்தால் டாலர் இருப்பு வேகமாக சரிந்து வருகிறது. இந்த நிலையில் சீனா உடனான இணைப்பு மூலம் டாலர் அல்லாமல் யுவான் பயன்பாட்டு மூலம் பொருளாதாரம், நாணய மதிப்பில் அர்ஜென்டினா-வில் பெரும் சரிவை தடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications