நரேந்திர மோடி அரசின் கீழ் வர்த்தகம் செய்வது எளிது.. 49% பேர் நம்பிக்கை.. மூட் ஆப் தி நேஷன் சர்வே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல துறைகள் முடங்கி போயுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அரசின் கீழ் வணிகம் செய்வது எளிது என்று 49% பேர் மூட் ஆப் தி நேஷன் சர்வேயில் நம்பிக்கை தெரிவித்துள்ளனராம்.

பிசினஸ்டுடே வெளியிட்டுள்ள மூட் ஆப் தி நேஷன் கருத்து கணிப்பில், மொத்தம் பங்களித்தவர்களில் 49% பேர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் இந்தியாவில் வணிகம் செய்வது எளிது என்று நம்புகிறார்களாம்.

சரி என்னதான் இந்த கருத்து கணிப்பு சொல்கிறது வாருங்கள் பார்க்கலாம்.

அரசுக்கு சாதகமாக பதில்

அரசுக்கு சாதகமாக பதில்

மொத்தம் பங்கேற்பாளர்களில் 49% பேர் நடப்பு மத்திய அரசுக்கு சாதமாக பதில் அளித்திருந்தாலும், மற்றொரு 39% சாதகமாக இல்லை என்று வேறு விதமாக உணர்கிறார்களாம். கடந்த ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில், மொத்தம் 12,141 பேரிடம் பங்கேற்றுள்ளார்கள். எனினும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இதே போன்ற சர்வேயில் நம்பிக்கை தெரித்தவர்கள் விகிதத்தை விட தற்போது சற்று குறைந்துள்ளது. இதில் 15% பேர் தாங்கள் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனராம்.

அதிகம் பேர் நம்பிக்கை

அதிகம் பேர் நம்பிக்கை

கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மோடி அரசின் கீழ் வர்த்தகம் செய்வது எளிது என்று 54% பேர் நம்பிக்கை தெரிவித்த நிலையில், தற்போது அது 5% குறைந்துள்ளது. இதே அப்போது பிரதமர் மோடி அரசின் கீழ் வர்த்தகம் செய்வதில் திருப்தி அடையவில்லை என்றும் 34% பேர் அப்போது கூறிய நிலையில், தற்போது இந்த விகிதம் 5% அதிகரித்துள்ளது கவனிக்கதக்கது.

உலக வங்கியில் கருத்து

உலக வங்கியில் கருத்து

கடந்த ஆண்டு உலக வங்கியின் சார்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் கீழ் எளிதாக தொழில் செய்வதற்கு வாய்ப்புள்ள நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டது. அதில் 190 நாடுகளைக் கணக்கிட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்தியா 77-வது இடத்தில் இருந்து, 2019ம் ஆண்டில் 14 இடங்கள் முன்னேறி 63-வது இடத்துக்கு முன்னேறியது.

பல சீர்திருத்தம்

பல சீர்திருத்தம்

இந்தியாவில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தேவையை அதிகரிக்கவும் சில பல நடவடிக்கைகள எடுத்து வருகிறது. இதன்படி கார்ப்பரேட் வரி குறைப்பு உள்ளிட்ட பல சீர்த்திருந்ததங்களை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க ஒற்றை சாளர முதலீட்டு அனுமதி கலத்தை அமைக்கவும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Around 49% people believe doing business in India to easier under Narendra modi govt

Mood of the Nation survey believe that doing business in India become a easier under Narendra modi govt, and This survey said 49% peoples trust of this. 39% of peoples feel otherwise.
Story first published: Friday, January 24, 2020, 11:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X