இந்தியக் கிரிக்கெட் அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வந்தவர் ராபின் உத்தப்பா. இந்திய அணிக்காக பல்வேறு சிறப்பான பங்களிப்பை இவர் வழங்கியிருக்கிறார். இந்நிலையில், ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை அன்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊழியர் வருங்கால வைப்பு நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராபின் உத்தப்பா 2021-ஆம் ஆண்டு ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். பிறகு சில டி20 லீக் தொடர்களில் போட்டி வர்ணனையாளராக இருந்து வந்தார். ஐபிஎல் தொடரில் பல அணிகளுக்காக போட்டியிட்டவர் இவர், 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

இவர் "சென்சுரீஸ் லைஃப் ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிடெட்"(Centuries Lifestyle Brand Private Limited) என்ற ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் இவர் இயக்குனராக உள்ளார். இவர் நடத்தி வரும் இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்ட சம்பளத்தில் பிடிக்கப்பட்ட பிராவிடண்ட் ஃபண்ட் பணத்தை பிஎஃப் அமைப்புக்குக் கட்டவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் PF கமிஷனரான சதாக்ஷரா கோபால் ரெட்டி மற்றும் கேஆர் புரம் பகுதிக்கான PF அதிகாரி ஆகியோர் ராபின் உத்தப்பாவைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. டிசம்பர் 27, 2024-க்குள் புலகேசி நகர் காவலர்கள் ராபின் உத்தப்பாவைக் கைது செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், ராபின் ஊத்தப்பா செலுத்தாத பிஎஃப் பணத்தை பிஎஃப் அமைப்பிற்கு செலுத்தி விட்டால் இந்தக் கைது உத்தரவு செல்லாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் அந்தப் பணத்தை விரைவில் செலுத்தி விட்டு கைது உத்தரவிலிருந்து விடுபட்டு விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் கிரிக்கெட் நாயகனாக இருந்த ஒருவர், இப்படி ஒரு சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பரவலாகப் பேசப்பட்டு வருகிறது, மேலும் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை உணர்த்தியுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications