2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டெமாக்ரடிக் கட்சி சார்பாக மீண்டும் ஜோ பைடன் போட்டியிடும் வேளையில், குடியரசு கட்சி சார்பாக டொனால்டு டிரம்ப் உட்பட சில இந்திய அமெரிக்கர்களும் போட்டிப்போட உள்ள நிலையில், குடியரசு கட்சி அதன் அதிபர் வேட்பாளர் யார் என்பதை இதுவரையில் அறிவிக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க மறுபுறம் இதுவரையில் எந்த ஒரு நாடும் எதிர்கொள்ளாத பிரச்சனையை எதிர்கொண்டு உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் வேளையில், அமெரிக்க அரசியலில் போலி தகவல்களை AI தொழில்நுட்பம் மூலம் அனைத்து தரப்பினரும் நம்பும் வகையில் சமுக வலைத்தளத்தில் அள்ளி வீசப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணம் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கைது செய்யப்பட்டதாக வெளியான புகைப்படம் பலராலும் நம்பப்பட்டது, சில மணிநேரத்திற்கு பின்பு தான் இது பொய்யான போட்டோ என்ற மக்களுக்கு தெரியவந்தது.

இதுப்போன்று போட்டோ, வீடியோ, ஆடியோ, டெக்ஸ்ட் என அனைத்து வகையில் AI தொழில்நுட்பம் மூலம் போலியாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இது 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கட்சிகள் ஒருவரின் வளர்ச்சியை, புகழை சீர்குலைக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முடியும். இதேபோல் ஒரு அரசியல் தலைவர் தான் செய்யும் குற்றம், தவறுகளையும் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்ற முடியும்.
2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் தான் முதன்முதலில் AI தொழில்நுட்பத்தின் எழுச்சிக்கு பின்பு நடக்க இருக்கும் மிகப்பெரிய தேர்தலாக இருக்கும். AI மூலம் என்ன பிரச்சனை என்பதை ஒரு வரியில் விளக்க வேண்டுமெனில் உண்மைக்கும் பொய்யான தகவலுக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது என்பது தான்.

இதனால் அமெரிக்கா 2024 தேர்தல் முடிவுகள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பது பெரிய கேள்விக்குறி தான். இதனால் மீண்டும் மக்கள் பிரின்ட் மீடியா பக்கம் திரும்புவார்களா என்ற கேள்வியும் எழுகிறது. 2024 ஆம் ஆண்டு இந்தியாவிலும் பொது தேர்தல் நடக்கும் நிலையில் அமெரிக்க தேர்தல் முன்னோட்டமாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications