இதுதான் AI பவர்!. MRI ரிப்போர்ட்டையே தூக்கி சாப்பிட்ட ChatGPT!. என்ன நடந்தது?

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இன்று பல வேலைகளையும் எளிமையாக்கியுள்ளதோடு, இதுவரை எட்ட முடியாத சாத்தியங்களை தொட்டுள்ளது. மனிதர்களால் செய்யக்கூடியவை என்று கூறப்பட்ட வேலைகளை தற்போது செயற்கை நுண்ணறிவு கருவியான சாட்ஜிபிடி (ChatGPT) செய்கிறது. அது என்னென்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இப்போதைய உலகில் டிரெண்டிங்காக இருக்கும் யோசனைகள் என்ன, எதிர்காலத்தில் மக்களை ஆளப் போகும் தொழில்நுட்பம் என்னவாக இருக்கும், நீங்கள் தொடங்க ஆசைப்பட்டுள்ள தொழிலில் அந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் சிறப்பானதாக இருக்குமா என பல்வேறு தொழில் சார்ந்த ஆலோசனைகள் வழங்க தொழில் வல்லுநர்கள் என்று சிலர் செயல்படுகின்றனர். தற்போது அதனை சாட்ஜிபிடி மிக எளிமையாக செய்து முடிகிறது. இருப்பினும், சில நேரங்களில் தவறான தகவல்களை வழங்கவும், பக்கச்சார்பாக பதிலளிக்கவும் வாய்ப்புள்ளது.

இதுதான் AI பவர்!. MRI ரிப்போர்ட்டையே தூக்கி சாப்பிட்ட ChatGPT!. என்ன நடந்தது?

அந்தவகையில், பெங்களூருவைச் சேர்ந்த கேபிடல்மைண்டின் நிறுவனர் தனது அனுபவம் குறித்த சுவாரஸியமான தகவலை பகிர்ந்துள்ளது. சுகாதாரப் பராமரிப்பில் AI இன் ஆற்றல் குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த கேபிடல் மைண்ட்(Catipalmind) நிறுவனர் தீபக் ஷெனாய், தனது X தளத்தில், ChatGPT-ஐப் பயன்படுத்தி ஒரு நுண்ணறிவை கண்டுபிடித்துள்ளனர். அதில் தனது முழங்கால் பிரச்சனை தொடர்பான MRI ஸ்கேன் ரிப்போர்ட்டை AI சாட்போட் பகுப்பாய்வு செய்தது. இதில், முழங்காலில் லேசான மூட்டு விலகல் இருந்ததை இந்த சாட்போட் கண்டறிந்தது. இதுதொடர்பாக பதிலளித்த சாட்போட், விளையாட்டு காயமாக இருக்கலாம் என்றும் மேலும், வேகமாக அமரக்கூடாது என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கியது.

இதையடுத்து மருத்துவரின் ஆலோசனைபடி சிகிச்சை பெறுவுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த தகவல் மிகவும் சுவாரஸியமாக இருந்ததாகவும் ஷெனாய் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இணையதள வாசிகளும் வரவேற்பு தெரிவித்ததோடு தங்களது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

அதில் ஒரு பயனர், "எனது அல்ட்ரா சோனிக் ரிப்போர்ட்டின்படி, மருத்துவர் ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்துவதற்கு முன்பே, chatgpt எனக்கு செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியலைக் கொடுத்தது, அது மருத்துவர் பரிந்துரைத்ததை விட மிகவும் சிறப்பாக இருந்தது என்று பகிர்ந்து கொண்டார்.

ஆனால், சில பயனர்கள் ChatGPT அல்லது கூகுள் அடிப்படையிலான சுயமாக சிகிச்சை பெறுதலை நம்பியிருக்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தினர். "உங்கள் ஆரோக்கியத்தை நிர்வகிக்க ChatGPT/Google அடிப்படையிலான சுய நோயறிதல் சிறந்த வழி அல்ல. அதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் நேரடியாக மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவ நிபுணர்களை நம்புங்கள்" என்று பயனர் கமெண்ட் செய்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+