செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் அனைத்து துறைகளும் முனைப்பு காட்டி வரும் வேளையில், பல துறையில் வேலைவாய்ப்புகள் குறையும் அச்சம் உள்ளது. இந்த வேளையில் வங்கித்துறையில் பெரும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு வங்கித் துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தை எதிர்கொள்ள உள்ளதாக புளூம்பெர்க் இன்டெலிஜென்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையில் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய வங்கி துறையில் சுமார் 2 லட்சம் பேரை தங்களுடைய வேலையை இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் 2 லட்சம் வேலைவாய்ப்பு என்பது மிகவும் குறைவு என நினைக்கலாம், ஆனால் இந்திய சந்தையில் இருக்கும் அனைத்து வங்கிகளும் செலவுகளை குறைப்பதில் தீவிரம் காட்டும் வேளையில் அதிகளவில் ஏஐ சேவைகளை பயன்படுத்த முனைப்பு காட்டும். இதேவேளையில் இந்திய ஐடி நிறுவனங்கள் அனைத்தும் ஏஐ துறையில் பெரும் படையை திரட்டி வரும் வேளையில் இந்திய வங்கித்துறையில் ஏஐ தாக்கம் தாமதமாக வந்தாலும் பெரிய அளவில் வரலாம்.
புளூம்பெர்க் இன்டெலிஜென்ஸ் கணிப்பு என்பது வங்கித்துறையை சேர்ந்த தலைமை தகவல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் கருத்துக்கணிப்பை அடிப்படையாகக் கொண்டது. இதன் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித ஊழியர்களால் முன்னர் செய்யப்பட்ட பணிகளை ஆட்டோமேட் செய்யப்படுவதால் சராசரியாக 3% பணியாளர்களை குறைக்க திட்டமிடுவதாக புளூம்பெர்க் இன்டெலிஜென்ஸ் அறிக்கை கூறியுள்ளது.
இந்த அறிக்கையை உருவாக்கிய மூத்த அதிகாரியான Tomasz Noetzel கூறுகையில், பேக் ஆபீஸ் நடவடிக்கைகள், மிடில் ஆபீஸ் செயல்பாடுகள் மற்றும் வங்கியின் அடிப்படை செயல்பாடுகளில் உள்ள பணிகள் அனைத்தும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். (ஏடிம் வந்த பின்பு கேஷியருக்கு வேலை குறைந்தது போல்).
இதேபோல் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவைத் துறைகளும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் ஏஐ-சாட்பாட் வாடிக்கையாளர்களை தானாக தொடர்பு கொண்டு சேவை அளிப்பதில் அதிக பங்கை வகிக்கும் போது இப்பரிவிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை வரும்.
மேலும், வாடிக்கையாளர்களின் அடையாளங்களை சரிபார்ப்பதில் ஈடுபடும் "உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்" (KYC) நடைமுறைகள், செயற்கை நுண்ணறிவு ஆட்டோமேட் செய்யப்படுவது மூலம் எளிமையாக்கி மனித ஊழியர்களின் தலையீடு இல்லாமல் செயல்படுத்தப்படலாம் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதேவேளையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வங்கித்துறையில் வேலைவாய்ப்புகளை முற்றிலுமாக அழிக்காது, மாறாக வங்கித் துறையில் வேலையின் தன்மையை மாற்றும் என்று Tomasz Noetzel தெரிவித்துள்ளார்.
வேலை இழப்பு அதிகமாக இருந்தாலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வங்கித் துறைக்கு ஒரு ஜாக்பாட் என்ற சொல்ல வேண்டும். ஏஐ மூலம் 200000 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டால் ஊதிய செலவுகள் மூலம் 2027 ஆம் ஆண்டுக்குள், வங்கிகள் வரிக்கு முந்தைய லாபத்தில் 12% முதல் 17% வரை அதிகரிப்பை காணலாம், இதை உலகளாவிய அளவில் பார்க்கும் போது 180 பில்லியன் டாலருக்கும் அதிகமாக தொகையை சேமிக்க முடியும்.
புளூம்பெர்க் இன்டெலிஜென்ஸ் கணிப்பில் பங்கேற்று பதிலளித்தவர்கள் (80%) அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் உற்பத்தித்திறன் மற்றும் வருவாய் அளவீட்டை குறைந்தபட்சம் 5% அதிகரிக்க செயற்கை நுண்ணறிவு உதவும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர்.
சிட்டி குரூப், தனி அறிக்கையில், செயற்கை நுண்ணறிவு மற்ற தொழில்களை விட வங்கித் துறையில் அதிகமான வேலைவாய்ப்புகளை பாதிக்கும் என்று கணித்துள்ளது. வங்கி வேலைகளில் சுமார் 54% பணிகளை ஆட்டோமேட் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை சிட்டி குரூப் தனது அறிக்கையிலும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications