B20 Summit India 2023 கூட்டத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் B20 இந்தியா தலைவரான என் சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை கூடடத்தில் பேசும் போது, செயற்கை நுண்ணறிவு (AI) இந்தியாவில் வேலை இழப்பை விட அதிக வேலைகளை உருவாக்குவதற்கு பங்களிக்கும் என்று தெரிவித்தார்.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு-ஐ கண்டு அஞ்சி வரும் வேளையிலும், பல கோடி மக்களின் வேலையை பறிக்கும் என எச்சரிக்கப்பட்டு வரும் வேளையில் என் சந்திரசேகரனின் பேச்சு பலருக்கும் நம்பிக்கை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு மூலம் நடைமுறையில் இருக்கும் எளிமையான பணிகள் அனைத்தையும் ஆட்டோமேட் செய்யப்பட்டாலும், பலருக்கு இதன் மூலம் புதிய வேலைவாய்புகள் உருவாக்கும், உதாரணமாக பழைய பணிகளை எப்படி செயற்கை நுண்ணறிவுடன் இணைப்பது, எப்படி AI இணைப்பில் மேம்படுத்துவது போன்ற பணிகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது.
இதுக்குறித்து B20 Summit India 2023 கூட்டத்தில் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் பேசுகையில் வரையறுக்கப்பட்ட அல்லது திறன்கள் இல்லாத நபர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஆற்றலை AI கொண்டுள்ளது. இதனால் அவர்கள் உயர்மட்ட வேலைகளில் ஈடுபட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றார்.
மேலும் இந்தியா தொழில்நுட்ப - சட்ட அணுகுமுறை மூலம் தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதை டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் இக்கூட்டத்தில் பாராட்டினார்.
இந்தியா போன்ற ஒரு நாட்டில், AI அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கும், ஏனெனில் இது சிறிய திறன் அல்லது திறமை இல்லாதவர்களை உயர் மட்ட வேலைகளைச் செய்ய அதிகாரம் அளிக்கும். ஒரு செவிலியர் ஒரு மருத்துவரின் பணிச்சுமையை ஏற்றுக்கொள்வார், இப்படிதான் மக்கள் அடுத்தக்கட்டத்திற்கு உயர AI வழிவகை செய்யும் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications