அருணாச்சலப் பிரதேச அரசு 2026 ஜனவரி 1ம் தேதியன்று இந்தியா-சீனா-மியானமர் எல்லைக்கு அருகில் உள்ள டோங் கிராமத்தில் சூரிய உதய விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த விழாவின் பின்னணியில், கிழக்கு எல்லைக்கு அருகில் தனது இருப்பை உறுதிப்படுத்தும் இந்தியாவின் முயற்சியின் ஒரு பகுதியாக மூலோபாய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளை தனது பகுதி என்று கூறிவரும் சீனாவுக்கு இந்தியாவின் அமைதியான பதிலடியாக இது கருதப்படுகிறது.
சூரிய உதய விழா
அருணாச்சலப் பிரதேச சுற்றுலா துறை செயலாளர் ரன்போவா ந்கோவா கூறுகையில், கடந்த 13ம் தேதியன்று நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் சூரிய உதய விழாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டம் சீன எல்லையை எதிர்கொள்ளும் பார்வர்டு ராணுவ நிலையான கிபித்துவில் நடைபெற்றதால் கவனத்தை ஈர்த்தது.

எல்லைக்கு அருகிலுள்ள கிழக்கு இமயமலையின் பின்னணியில் அமைக்கப்பட்ட சூரிய உதய விழா 2025 டிசம்பர் 29ம் தேதி முதல் 2026 ஜனவரி 3ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளூர் இசைக்குழுக்களின் இசை, நீர் விளையாட்டு மற்றும் மலையேற்றம் அதோடு புத்தாண்டு தினத்தன்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் ஒரு பெரிய சூரிய நமஸ்காரம் ஆகியவை சிறப்பம்சங்களாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மூலோபாய செய்தி
லெப்டினல் ஜெனரல் (ஓய்வு) ராணா பிரதாப் கலிதா கூறுகையில், கிபித்துவில் அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதும், எல்லை கிராமத்தில் ஒரு விழாவை முன்மொழிவதும் சீனாவிற்கு மூலோபாய செய்தி அனுப்புவதற்கு முக்கியம் என்று தெரிவித்தார்.
2017ல் சிக்கன் நெக் என்று அழைக்கப்படும் பாதுகாப்பு குறைந்த சிலிகுரி வழித்தடத்தை நெருங்க சீன ராணுவம் முயற்சித்தது. இது மத்திய அரசுக்கு முதன்மையான கவலையாக இருந்தது. வடக்கு வங்காளத்தில் சுமார் 22 கிமீ நீளமுள்ள இந்த குறுகிய பகுதி வடகிழக்கை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே நில இணைப்பாகும். சர்ச்சைக்குரிய வழித்தடத்தில் சீனாவின் முன்னேற்றத்த தடுத்தாலும், வழித்தடத்தை சார்ந்திருப்பதை குறைப்பதற்கான ஒரு மூலோபாய மாற்று விரைவில் செயல்பட தொடங்கியது.
சரக்கு கப்பல்கள்
ஜமுனா நதிக்கு (வங்கதேசத்தில் பிரம்மபுத்திராவின் பெயர்) அகழ்வாராய்ச்சி இயந்திரங்களை அனுப்புவது ஒரு முக்கிய படியாகும். அங்கு 175 கி.மீ நீளமுள்ள சிராஜ்கஞச் மற்றும் டைகாவா இடையேயான பகுதி சரக்கு கப்பல்கள் போக்குவரத்து மிகவும் ஆழமற்றதாக காணப்பட்டது. இது கால்வாயை ஆழப்படுத்தவும், புதிய வர்த்தக பாதையை திறக்கவும் முயற்சிகளை தூண்டியது.
வங்கதேசத்தில் உள்ள நதி வழிதடங்கள் வழியாக கொல்காத்தாவிலிருந்து கவுகாத்திக்கு ஒரு போதும் சுமுகமாக இருக்கவில்லை. வங்கதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான ஒரு நட்புறவற்ற இடைக்கால அரசாங்கம் அமலில் உள்ளதால், சிலிகுரி வழித்தடத்தின் நீடித்த பாதிப்பை நிவர்த்தி செய்ய இந்தியா ஒரு திட்டத்தை தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
விமான தளம்
வங்கதேசத்தில் லால்மோனிர்ஹாட்டில் உள்ள பிரிட்டிஷ் கால விமான தளத்தை மீண்டும் கட்ட (சிலிகுரிக்கு ஆபத்தான முறையில் அருகில்) சீனாவின் ஆதரவு இருப்பதாக வெளியான தகவல்கள் மத்திய அரசின் மூலோபாய மாற்றுகளுக்கான தேவையை மேலும் வலுப்படுத்தின.
இந்நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ரூ.22,864 கோடி மதிப்பீட்டில் மேகாலயாவில் உள்ள மவ்லிங்குங் (ஷில்லாங்கிற்கு அருகில்) முதல் அசாமில் உள்ள பஞ்ச்கிராம் (சில்சார் அருகே) வரை 166 கி.மீ நீளத்தில் புதிதாக நான்கு வழி சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதில் 144 கி.மீ மேகாலயாவின் கரடு முரடான மலைகள் வழியாக செல்லும்.
ஷில்லாங்-சில்சார் சாலை
மேற்கில் ஏற்கனவே ஷில்லாங்-சில்சார் சாலை உள்ள ஒரு பகுதியில் ஒரு அணுகல் கட்டுப்பாட்டு நெடுஞ்சாலையை திட்டமிடுவது அசாதாரணமாக தோன்றலாம். ஆனால் மூலோபாய ரீதியாக இது குறிப்பிடத்தக்க மதிப்பை கொண்டுள்ளது. புதிய பாதை குவஹாத்திக்கும், ஜஸ்வாலுக்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்தும். மேலும் இறுதியில் இந்தியா-மியான்மர் எல்லை வரை நீட்டிக்கப்படும்.
ஷில்லாங் (மேகாலயா) மற்றும் சில்சார் (அசாம்) இடையே 166 கி.மீ நீளமுள்ள புதிய நெடுஞ்சாலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது முதல் டோங்கில் ஒரு எல்லை விழா அறிவிப்பு வரையிலான இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வடகிழக்குக்கான அமைதியாக விரிவடையும் மூலோபாய வரைபடத்தை வெளிப்படுத்துகின்றன. சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த சாலை, துறைமுகம் மற்றும் எல்லை விழா ஆகியவை இந்தியாவின் வடகிழக்கை பாதுகாப்பதற்கும், துணை கண்டத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்பதற்குமான ஒரு கணக்கிடப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாகும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications