டெல்லி யூனியன் பிரதேசத்தில் 2017 முதல் 2021ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் மதுபான ஒழுங்குமுறை கொள்கையில் நடந்த முறைகேடுகள் நடந்துள்ளது. முறையற்ற உரிமம், சில்லரை விற்பனையாளர் நியமனங்கள் மற்றும் மேற்பார்வை இல்லாமை போன்றவற்றால் டெல்லி கருவூலத்திற்கு ரூ.2,027 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை வெளிப்படுத்தியது.
இந்த ஊழல் வழக்கில், அப்போது கலால் துறை பொறுப்பாளராக இருந்த மணிஷ் சிசோடியா, அப்போது முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஊழலை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், டெல்லி கலால் கொள்கை ஊழலால், ஆம் ஆத்மி அரசாங்கத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை துறந்தார், புதிய முதல்வராக ஆம் ஆத்மியின் அதிஷி பொறுப்பேற்றார்.
இந்நிலையில், 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆம் ஆத்மி 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது.
குறிப்பாக, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மணிஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகியோரும் அடங்குவர். மதுபான ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்த மூவரையும் மக்கள் ஆதரிப்பார்களா என்று சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பாஜக 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதேசமயம், ஆளும் கட்சியான ஆம் ஆத்மி 27 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
குறிப்பாக, மணிஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகிய ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைகள் தங்களது தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதற்கு டெல்லி மதுபான ஊழல் வழக்கே காரணம் என கூறப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications