விபத்தால் மாறிப்போன வாழ்க்கை… ரூ.3,300 கோடி சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்பிய நம்ம தளபதி பட கலெக்டர்..!

21 வயதில் சினிமா வாய்ப்பு.. அதுவும் இயக்குநர் மணி ரத்தினத்தின் படத்தில் உடன் நடிப்பவர்கள் அப்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினிகாந்த் , மம்முட்டி. இப்படி ஒரு வாய்ப்பு தான் நடிகர் அரவிந்த்சாமிக்கு கிடைத்தது. அடுத்தடுத்து படங்கள் நடித்து பெண்களின் கனவு நாயகனாக மாறினார். ஆனால் அந்த ஒரு விபத்து அரவிந்த்சாமியின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ஆனால் அந்த விபத்தில் இருந்து மீண்டெழுந்த அவர் 3,300 கோடி மதிப்புள்ள தொழிலை கட்டி எழுப்பியுள்ளார்.

1991ஆம் ஆண்டு தளபதி திரைப்படம் வெளியானது. ரஜினிகாந்த், மம்முட்டி ஆகியோர் கூட்டணியில் வெளியான இந்த படத்தில் தான் இளம்பெண்களின் கனவு நாயகனாக கலெக்டர் வேடத்தில் நடித்தார் அரவிந்த்சாமி. தமிழ் திரையுலகில் மணிரத்தினம் படத்தில் அதுவும் ரஜினி மற்றும் மம்முட்டி உடன் நடிக்கும் வாய்ப்பு அறிமுக படத்திலேயே கிடைத்துவிட்டது. ஆனால் அது முழுக்க முழுக்க அவரது திறமைக்கு தான் கிடைத்தது.

விபத்தால் மாறிப்போன வாழ்க்கை… ரூ.3,300 கோடி சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்பிய நம்ம தளபதி பட கலெக்டர்..!

தளபதி படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மணிரத்தினம் அவர்களே அரவிந்த்சாமிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். அப்படி தான் ரோஜா படம் எடுக்கப்பட்டது. அதுவும் செம ஹிட்டாகி அரவிந்த்சாமிக்கு பெரிய பெயரை பெற்று தந்தது. அடுத்ததாக மணிரத்தினத்தின் பாம்பே படம். அதுவும் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டாகி முன்னணி கதாநாயகனாக இவரை மாற்றியது.

ஆனால் 2005ஆம் ஆண்டு திடீரென அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதில் படுத்த படுக்கையானார். இது அவரின் சினிமா கனவையும் சிதைத்தது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அவர் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை உண்டானது. ஆனால் அரவிந்த்சாமி தன்னம்பிக்கையோடு தொழில்துறையில் கால்பதிக்க தொடங்கினார்.

லயோலா கல்லூரியில் காமர்ஸ் பிரிவிலும், வட கரோலினாவின் வேக் ஃபாரஸ்டில் தொழில் மேலாண்மை படிப்பையும் முடித்தவர் என்பதால் அவர் முதலில் ஸ்டீல் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டார். பின்னர் தான் சொந்த நிறுவனத்தை தொடங்கினார்.

ரெடிஃப் தளம் அரவிந்த் சாமி முதலில் ProLease India என்ற பேரோல் நிறுவனத்தின் வேலை செய்ததாகவும் பின்னர் Talent Maximus என்ற நிறுவனத்தை தொடங்கியதாகவ்பும் குறிப்பிடுகிறது. 2022ஆம் ஆண்டில் Talent Maximus நிறுவனத்தின் மதிப்பு 3300 கோடி ரூபாய் ஆகும்.

விபத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வந்து தொழிலை மேம்படுத்திய அரவிந்த்சாமி பீனிக்ஸ் பறவையாக மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கினார். ஜெயம் ரவியுடன் வில்லனாக நடித்த தனிஒருவன் படம் அரவிந்த் சாமிக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

அண்மையில் கூட மெய்யழகன் படத்தில் தோன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அப்போது தன்னுடைய வாழ்க்கை குறித்து இவர் அளித்த பேட்டிகள் சமூகவலைதளங்களில் பலருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பகிரப்பட்டன.

விபத்தில் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் சமயத்தில் உடல் எடை கூடி, முடி கொட்டி அரவிந்த்சாமியா இது என கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானவர் சில ஆண்டுகளிலேயே தன்னுடைய தோற்றத்தை மாற்றி மீண்டும் திரையுலகில் கனவு நாயகனாக வலம் வருகிறார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+