அரவிந்த்சாமி ஒரு காலத்தில் தமிழ்நாட்டு பெண்களிடம் எப்படி மாப்பிள்ளை வேண்டும் என கேட்டால் பெரும்பாலானவர்கள் இந்த பெயரை தான் உச்சரித்தார்கள். திரைத்துறையில் கால்பதித்து தன் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர். அரவிந்த்சாமியை ஒரு நடிகராக தான் நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த தொழிலதிபரும் கூட.
அரவிந்த்சாமிக்கு 21 வயதிலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவருடைய படத்தில் வாய்ப்பு கிடைத்துவிடாத என நடிகர்கள் பலரும் காத்திருந்த இயக்குநரான மணி ரத்தினத்தின் படத்திலேயே அரவிந்த்சாமிக்கு முதல் படம் வாய்ப்பு வந்தது. உடன் நடிப்பவர்களோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்முட்டி. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் அரவிந்த்சாமி.

தளபதி படத்தில் கலெக்டராக தோன்றி ரசிகர்களை பிடித்தார். குறிப்பாக பெண்கள் மனதில் இடம்பிடித்தார். அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வந்தார். ஆனால் திடீரென 2005ஆம் ஆண்டு ஒரு விபத்து ஏற்பட்டு அவருடைய வாழ்க்கையே மாறி போனது . எழுந்து கூட நடக்க முடியாத நிலைக்கு ஆளானார். இதனால் திரைத்துறை வாய்ப்பும் போனது.
ஆனால் அது தான் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் ஒரு தொழிலதிபராக அரவிந்த்சாமியை மாற்றியது. அரவிந்த்சாமி சென்னை லயோலா கல்லூரியில் காமர்ஸ் பிரிவிலும், வட கரோலினாவின் வேக் ஃபாரஸ்டில் தொழில் மேலாண்மை படிப்பையும் முடித்தவர் என்பதால் தன்னம்பிக்கையுடன் தொழில் உலகில் கால்பதித்தார்.
அரவிந்த் சாமி முதலில் ProLease India, InterPro Global ஆகிய நிறுவனங்களில் எல்லாம் தலைமை பொறுப்பு வகித்தார். இதன் மூலம் கிடைத்த அனுபவம் தான் அவரை Talent Maximus என்ற நிறுவனத்தை தொடங்க வைத்தது. இந்த நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுக்கு தேவையான மனிதவள சேவைகளை வழங்குகிறது. ஐடி, பிபிஓ, சுகாதார துறை என பல துறைகளுக்கும் மனித வள சேவைகளை விரிவாக்கி பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
2022ஆம் ஆண்டில் Talent Maximus நிறுவனத்தின் மதிப்பு 3300 கோடி ரூபாய் என உயர்ந்தது. சென்னையில் தலைமையகத்தை கொண்டுள்ள இந்த நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது.
அரவிந்த்சாமி தொழில்துறையில் வெற்றி அடைந்துள்ள அதே வேளையில் திரைத்துறையிலும் இரண்டாவது இன்னிங்ஸ் அடித்து சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறார். மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கிய அரவிந்த்சாமி, தனிஒருவன் , மெய்யழகன் படங்களில் தோன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சினிமாவிலும் தொழில்துறையிலும் திறம்பட செயல்பட்டு அனைவருக்கும் முன் உதாரணமான ஒரு மனிதராக இருக்கிறார்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications