அமெரிக்கா: சர்வதேச அளவில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பாக ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) எனப்படும் தொழில்நுட்பம் மனிதர்களின் பெரும்பாலான வேலைகளை மிச்சப்படுத்தி வருகிறது.
இது ஒரு வசதியாக தோன்றினாலும்,ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்புகள் ஏற்படலாம் என்ற அச்சம் மனிதர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க், வருங்காலத்தில் எல்லா வேலைகளையும் ஏஐ அழித்து விடும் என கூறியுள்ளார்.

பாரீஸில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பேசிய எலன் மஸ்க், முன்பை விட ஏஐ தொழில்நுட்பம் பல மடங்கு வளர்ச்சி அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஏஐ தொழில் நுட்பத்தால் அனைத்து வேலைகளும் அழிந்துவிடும் என குறிப்பிட்ட எலன் மஸ்க், "ஒரு கட்டத்தில் நம் யாருக்குமே வேலை இருக்காது, ஏனெனில் நம் வேலைகள் அனைத்தையும் தொழில்நுட்பமே செய்து விடும்.
ஆனால் இது ஒரு மோசமான மாற்றம் என்று சொல்லிவிட முடியாது. எதிர்காலத்தில் நீங்கள் வேலை பார்க்க விரும்பினால் மட்டுமே பார்க்கலாம். ஏனெனில் வேலை என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிடும்" என கூறியுள்ளார்.
ரோபோக்களே அனைத்து வேலைகளையும் சேவைகளையும் செய்து விடும் என கூறிய எலன் மஸ்க், எதிர்காலத்தில் வேலை இல்லாமல் மனிதர்கள் உணர்வுப்பூர்வமாக எவ்வாறு தன்னிறைவு பெறுவார்கள் என்ற கேள்வியையும் முன் வைத்தார்.
கணினியும் ரோபோக்களும் நம்மை விட வேலைகளை சிறப்பாக செய்யும் என்றால் நம்முடைய பங்கு என்னவாக இருக்கும்? என வினவிய எலன் மஸ்க், ஏஐ செய்யும் வேலைகளில் மனிதர்களின் பங்களிப்பு இருக்கும் ஏனெனில் ஏஐ-க்கு அர்த்தம் கொடுப்பவர்களாக மனிதர்கள் இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த நிலை சாத்தியப்பட சர்வதேச உச்சபட்ச வருவாய் என்ற சூழல் உருவாக வேண்டும், இதனை சர்வதேச குறைந்தபட்ச வருவாயுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது என்றும் மஸ்க் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இது குறித்து அவர் விரிவாக பேசவில்லை.
அதேபோல குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்ற அறிவுரையையும் எலன் மஸ்க் வழங்கியுள்ளார்.
சமூக ஊடகங்கள் dopamine-maximizing AI புரோகிராம் மூலம் கட்டுப்படுத்தப்படுவதால் குழந்தைகள் அவற்றை பயன்படுத்தும் நேரத்தை பெற்றோர் கட்டாயம் கண்காணிக்க வேண்டும் என எலன் மஸ்க் கேட்டுக் கொண்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களுக்கு நிகராக வேலைகளை செய்து வருவதால் பல்வேறு துறைகளும் தானியங்கி முறைகளுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டன. இதனால் சர்வதேச அளவில் மனிதர்களின் வேலைவாய்ப்பு படிப்படியாக பறி போகும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications