அமராவதியால் ஹைதராபாத்-க்கு சிக்கல்..? சந்திரபாபு நாயடு ஆட்சியில் வெடித்தது பிரச்சனை..!!

ஹைதராபாத்: ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்ற உடனே தெலுங்கு தேசம் கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடு அமராவதி தான் ஆந்திராவின் தலைநகரம் எனக் கூறினார். இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் மூன்று மூன்று தலைநகர்கள் என்ற திட்டத்தை நிராகரித்த சந்திரபாபு நாயுடு ஆந்திராவிற்கு ஒரே ஒரு தலைநகரம் தான் அது அமராவதி தான் என திட்டவட்டமாக கூறினார். எனவே ஆந்திராவின் தலைநகரமாக அமராவதி உருவாகப் போகிறது என்பது உறுதியாகிவிட்டது.

சந்திரபாபு நாயுடுவை பொறுத்தவரை உள்கட்டமைப்புகளில் அதிக கவனம் செலுத்தக்கூடிய ஒரு நபர். அமராவதி அவரது கனவு நகரமாக இருப்பதன் காரணமாக அவர் மிகச்சிறந்த கட்டமைப்புகளை தான் இங்கே கொண்டு வருவார் என்பதே உண்மை. எனவே தற்போது அமராவதிக்கும் ஹைதராபாத்துக்கும் இடையே தான் போட்டி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமராவதியால் ஹைதராபாத்-க்கு சிக்கல்..? சந்திரபாபு நாயடு ஆட்சியில் வெடித்தது பிரச்சனை..!!

குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் ஏற்கனவே ஹைதராபாத் நகரம் முன்னணியில் இருக்கக்கூடிய நிலையில் தற்போது அமராவதி அதற்கு ஒரு போட்டியாக வந்து நிற்கிறது. இதனால் ஹைதராபாத்தில் ரியல் எஸ்டேட் துறை சற்று ஆட்டம் காணலாம் என ANAROCK என்ற ஆய்வு நிறுவனம் கூறுகிறது.கடந்த மூன்று ஆண்டுகளில் ஹைதராபாத்தில் நிலத்தின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இதேபோல் ஹைதராபாத் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராகும், ஆந்திரா தலைநகரான அமராவதியை ஹைதராபாத் போலவே ஒரு ஹைய் டெக் சிட்டியாக மாற்ற வேண்டும் என்பதை தற்போது முக்கிய டார்கெட் ஆக உள்ளது.

சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய சூழலில் அமராவதியிலும் பல்வேறு நிறுவனங்கள் தொழில்களை தொடங்க ஆர்வம் காட்டக்கூடும். எனவே ஆந்திராவில் ரியல் எஸ்டேட் துறை சற்றே ஆட்டம் காணும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில நிறுவனங்கள் ஹைதராபாத்தில் இருந்து அமராவதிக்கு இடம்பெயர கூடும் என்ற ஒரு தகவலையும் இந்த நிறுவனம் வழங்கியுள்ளது. அமராவதி நகரம் புதிதாக உருவாவதால் அங்கே தொழில் தொடங்க வருபவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும்.

அந்த வகையில் இது ஹைதராபாத் நகருக்கு பெரிய சவாலாக வந்து முடியலாம். எனவே ஹைதராபாத் ரியல் எஸ்டேட் சந்தையில் கரெக்சன் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹைதராபாத்தில் ரெசிடென்சியல் மார்க்கெட் என்பது 2001 முதல் 2024 வரை மிகச் சிறந்த வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது 2.18 லட்சம் யூனிட்டுகள் கட்டப்பட்டு 1.50 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளன. 2023 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 76,300 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. மேற்கு ஹைதராபாத்தில் டிமாண்ட் அதிகரித்திருப்பதாக தெரிகிறது.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த போது சந்திரபாபு நாயுடு அமராதியை ஆந்திராவின் தலைநகராக உருவாக்க போவதாக அறிவித்தார். 2015 ஆம் ஆண்டு அவர் முதலமைச்சராக இருந்தபோது இந்த திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் 2019இல் ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஆட்சியைப் பிடித்த உடன் அமராவதி திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்திருப்பதால் பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் சுய தொழில் நிறுவனங்களும் அமராவதியை நோக்கி படை எடுக்கும் என தெரிகிறது. கிரடாய் நிறுவனத்தின் தேசிய செயலாளரான ராம் ரெட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் அமராவதி நோக்கி நிறுவனங்கள் செல்லும் என்பதால் ஹைதராபாத்தில் சொத்துக்களின் விலைகளில் சற்றே சரிவு ஏற்படலாம் என கூறியுள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+