மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சத்தை எட்டி இருக்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் நடந்து வந்த நிலையில் அமெரிக்கா இந்த மோதலில் களமிறங்கி ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வான்வெளி தாக்குதலை நடத்தி இருக்கிறது. அமெரிக்காவின் இந்த தாக்குதல் ஈரானை பெரிய அளவில் கோபப்படுத்தியுள்ளது.
இந்த போர் பதற்றம் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையை தொடர்ந்து உச்சத்திற்கு கொண்டு செல்லும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை என்பது 3,500 இல் இருந்து 3 , 700 டாலர்கள் வரை செல்லலாம் என கணிப்பு வெளியிட்டுள்ளனர். ஆக்சிஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் ஆய்வாளரான அக்சய் வெளியிட்டுள்ள தகவலில் ஸ்பாட் தங்கத்தின் விலை 3 ,314 டாலர்களுக்கு மேல் சென்றால் அது 3 ,770 ரூபாய் வரை எட்டும் என கணிப்பு வெளியிட்டு இருக்கிறார் .மேலும் 3450 டாலரில் இருந்து 3520 டாலர்கள் வரை ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை நீடிக்கும் என்றும் அவர் கூறுகிறார் .

தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் விலையும் உயரும் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். வெள்ளியின் விலை 40 டாலர்கள் வரை உயரக்கூடும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை தங்கத்தின் விலை 25 சதவீதம் அதிகரித்து இருக்கிறது , வெள்ளியின் விலை 24 சதவீதம் உயர்ந்திருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல்கள் ,ஈரான் மோதல், பொருளாதார மந்த நிலை உள்ளிட்டவையே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது .
தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால் அனைவரும் பங்குச்சந்தைகள் ,பத்திரங்கள் உள்ளிட்டவற்றை விடுத்து தங்கத்தை நோக்கி முதலீடு செய்கின்றனர். தொழில்துறையில் பயன்பாடு அதிகமாக இருக்கிறது என்பதால் வெள்ளியின் விலையும் அதிகரித்து வருகிறது. முன்னதாக கோல்டுமென் சச்ஸ் நிறுவனம் தங்கத்தின் விலை 3,700 டாலர்கள் வரை உயரும் என்றும் அடுத்த ஆண்டு 4,000 டாலர் வரை எட்டலாம் என்றும் கணிப்பு வெளியிட்டு இருந்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்தால் இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயரும் குறிப்பாக சில்லறை வணிகத்தில் நாம் தங்கம் வாங்கும்போது அத்துடன் செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றை செலுத்த வேண்டும்.
எனவே ஈரான் மோதல் நீடிக்கும் வரை தங்கம் விலையில் சாமானிய மக்களுக்கு நல்ல செய்தி வராது என்றே சொல்லப்படுகிறது. கடந்த வாரத்தை பொருத்தவரை மூன்று நாட்கள் தங்கத்தின் விலை உயர்ந்தது, மூன்று நாட்கள் தங்கத்தின் விலை சரிந்தது. சனிக்கிழமை அன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 9235 ரூபாய் என விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான இன்றும் அதே நிலை நீடிக்கிறது.


Click it and Unblock the Notifications